ருசியான மதுரை சிக்கன் கோலா உருண்டை குழம்பு இப்படி செய்து பாருங்க! வீட்டிலே செய்து பாருங்க!

Summary: பொதுவாக மட்டன் கோலா உருண்டை குழம்பு செய்வது வழக்கம். ஆனால் சிக்கனிலும் உருண்டை குழம்பு செய்யலாம். சிக்கனில் எப்பொழுதும் சிக்கன் குழம்பு, சிக்கன் வறுவல், சிக்கன் 65 போன்றுதான் வீட்டில் செய்வோம்.இந்த வார இறுதியில் ஒரு முறை இந்த ரெசிபியை ட்ரை பண்ணுங்க வீட்டில் உள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள். இதை எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணுங்க.

Ingredients:

  • ½ கிலோ எலும்பில்லாத சிக்கன்
  • 1 ஸ்பூன் சோம்பு தூள்
  • ½ ஸ்பூன் கரம் மசாலா
  • ½ ஸ்பூன் மிளகாய் தூள்
  • ¼ ஸ்பூன் மல்லித்தூள்
  • 1 சிட்டிகை மஞ்சள் தூள்
  • 1 ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட்
  • கொத்தமல்லி தலை
  • புதினா
  • உப்பு
  • 3 ஸ்பூன் எண்ணெய்
  • 1 பிரியாணி இலை
  • 1 பட்டை
  • 2 கிராம்பு
  • பெரிய வெங்காயம்
  • 2 ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட்
  • 3 தக்காளி
  • ½ ஸ்பூன் கரம் மசாலா
  • 1 ஸ்பூன் மிளகாய் தூள்
  • 1 ஸ்பூன் மல்லித்தூள்
  • 1 கப் தேங்காய் பால்
  • ½ ஸ்பூன் மிளகு தூள்
  • உப்பு

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 மிக்ஸி

Steps:

  1. முதலில் எலும்பில்லாத சிக்கனை நன்றாகக் கழுவி மிக்சியில் போட்டு அரைத்து வைக்கவும் பிறகு உருண்டைக்கு தேவையான பொருட்களை அனைத்தையும் போட்டு பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக செய்து தனியாக எடுத்து வைக்கவும்.
  2. பிறகு ஒரு கடையாய்யை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் பிரியாணி இலை, பட்டை, இலவங்கம், ஸ்டார் பூ, சேர்த்து வதக்கி நறுக்கிய வெங்காயம் சேர்க்கவும்.
  3. வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.
  4. நன்றாக வதங்கியதும் அரைத்து வைத்துள்ள தக்காளியை சேர்த்து தாள்களின் பச்சை வாசனை போகும்வரை நன்றாக வதக்கி விடவும்.
  5. பிறகு தக்காளி வதங்கிய பிறகு, கரம் மசாலா, மிளகாய் தூள், மல்லி தூள், சேர்த்து வதக்கி விடவும்.
  6. வதங்கியதும் அதில் தேங்காய் பால் சேர்த்து ½ தண்ணீரும் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து ஏற்கனவே அரைத்து உருண்டை பிடித்த சிக்கன் உருண்டைகளை சேர்த்து 15 நிமிடம் நன்றாக கொதிக்கவிடவும்.
  7. கொதித்த பிறகு மிளகு தூள், நறுக்கிய கொத்தமல்லி தலைகளை சேர்த்து இறக்கவும்.
  8. இப்பொழுது சிக்கன் கோலா உருண்டை குழம்பு தயார்.