ஹோட்டல் ஸ்டைலில் பட்டர் சிக்கன் சாப்பிடனுமா இப்படி மட்டும் செஞ்சு பாருங்க, ருசி அபாரமா இருக்கும்!!!!

Summary: குழந்தைகள்விரும்பி சாப்பிட இந்த பட்டர் சிக்கன் இப்படி செய்து கொடுத்து பாருங்கள், கொஞ்சம் கூட மிச்சம் வைக்காமல் சாப்பிட்டு முடிப்பார்கள். இதனை சுலபமாகவும் விரைவாகவும் செய்யலாம்.  பட்டர் சிக்கன் வட இந்தியாவில் இருந்து பெறப்பட்ட உணவு வகை. இதனை வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டு சுலபமாக செய்யலாம். சப்பாத்தி, பரோட்டா,சீரக சாதம், வெஜிடபிள் பிரியாணி, தக்காளி சாதம் ஆகியவற்றுடன் இது சுவையாக இருக்கும்…இந்த சமையல் குறிப்பு பதிவில் ரெஸ்டாரன்ட்களில் கிடைக்கும் பட்டர் சிக்கன் போல எப்படிசெய்வது என்பதை தெரிந்து கொள்ள போகிறோம்.

Ingredients:

  • 1/2 கிலோ சிக்கன்
  • 50 கிராம் பட்டர்
  • 2 தேக்காண்டி சில்லி பவுடர்
  • 1 மேசைக்கரண்டி புளிப்பில்லாத கட்டி தயிர்
  • 1 பட்டை
  • 2 கிராம்பு
  • உப்பு
  • மல்லி இலை
  • 2 வெங்காயம்
  • 2 தக்காளி
  • 10 முந்திரிப்பருப்பு

Equipemnts:

  • 1 கடாய்

Steps:

  1. பட்டர் சிக்கன் செய்ய தேவையான பொருள்களை தயாராக வைத்து கொள்ளவும். பின்பு சிக்கனில் இஞ்சி பூண்டு விழுது. தயிர், உப்பு, ஒரு தேக்கரண்டி சில்லிபவுடர் போட்டு பிரட்டி அரை மணிநேரம் ஊற வைக்கவும்.
  2. வெங்காயம்,முந்திரியை சிறிது பட்டர் போட்டு நன்கு வதக்கி ஆற வைக்கவும். தக்காளியை கொதிக்கும் நீரில் போட்டு தோல் உரித்து வைக்கவும். மிக்ஸியில் தோல் உரித்த தக்காளி, வதக்கிய வெங்காயம், முந்திரி சேர்த்து அரைத்து எடுக்கவும்.
  3. பின்பு கடாயில் பட்டர் போட்டு அதிகம் உருகும் முன்பு பட்டை, கிராம்பு, ஏலம் போட்டு உடனே ஊற வைத்த சிக்கனைபோட்டு சிவக்க பிரட்டி வேக விடவும். பின்பு அரைத்த தக்காளி, முந்திரி வெங்காயம் பேஸ்ட் சேர்த்து நன்கு பிரட்டி விடவும்.
  4. பின் ஒரு தேக்கரண்டி சில்லி பவுடர், உப்பு சிறிது சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து வேக விடவும். நன்கு கொதி வந்ததும் மல்லி இலை தூவி இறக்கவும். சுவையான பட்டர் சிக்கன் தயார்!
  5. இது சப்பாத்தி, நாண், பூரி, ப்ரைடு ரைஸ் வகைகளுக்கு நல்ல பொருத்தமாக இருக்கும்..கடையில் நாம் வாங்கும் பட்ட சிக்கன் டேஸ்ட் கண்டிப்பாக வரும்.