சுட சுட சோறுடன் சாப்பிட ருசியான சின்ன வெங்காய கார குழம்பு இப்படி செய்து பாருங்க!

Summary: சின்ன வெங்காய கார குழம்பு எல்லோருக்கும் மிகவும் பிடித்த குழம்பு ஏனென்றால் அவ்வளவு சுவையாக இருக்கும். அதுமட்டும் அல்லாமல் ஆரோக்கியமானதும் கூட. வாரத்தில் ஒரு முறையாவதும் இந்த வெங்காய குழம்பு செய்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம் மிகவும் நல்லது. இந்த குழம்பு செய்வதும் மிகவும் சுலபம், குறைந்த நேரத்தில் சுவையாக வீட்டிலே செய்து விடலாம். இந்த சின்ன வெங்காய கார குழம்பு செய்து சுட சுட சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டால் அட்டகாசமான சுவையில் இருக்கும். பிறகு இட்லி, தோசை போன்ற வற்றுடனும் சேர்த்து சாப்பிட்டால் ருசியாகவும் இருக்கும். எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க.

Ingredients:

  • எண்ணெய்
  • 2½ டேபிள் ஸ்பூன் முழு மல்லி
  • 10 வரமிளகாய்
  • 1 டீஸ்பூன் சீரகம்
  • ½ டீஸ்பூன் மிளகு
  • ¼ டீஸ்பூன் வெந்தயம்
  • கருவேப்பிலை
  • 1 டேபிள் ஸ்பூன் கொப்பரை தேங்காய்
  • எண்ணெய்
  • 4 சின்ன வெங்காயம்
  • 2 பல் பூண்டு
  • 2 தக்காளி
  • உப்பு
  • 2½ டேபிள் ஸ்பூன் நல்எண்ணெய்
  • 300 கிராம் சின்ன வெங்காயம்
  • ½ டீஸ்பூன் கடுகு
  • வெந்தயம்
  • தாளிப்பு வடகம்
  • 6 பல் பூண்டு
  • கருவேப்பிலை
  • 2 பச்சை மிளகாய்
  • 1½ கப் புளி தண்ணீர்
  • 1 டீஸ்பூன் பொடிச்ச வெள்ளம்

Equipemnts:

  • 2 கடாய்
  • மிக்ஸி

Steps:

  1. முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து ½ டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து முழு மல்லி, வரமிளகாய், சீரகம், மிளகு, வெந்தயம், கருவேப்பிலை, கொப்பரை தேங்காய், சேர்த்து பொன்னிறமாக வறுத்து கொள்ளவும். அதனை தனியாக தட்டில் எடுத்துக்கொள்ளவும். நன்கு இதனை ஆறவிடவும்.
  2. அடுத்து ஒரு பான் அடுப்பில் வைத்து ½ டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து 4 சின்ன வெங்காயம், பூண்டு வதங்கியதும் தக்காளி சேர்த்து கொழைய வதக்கவும் சிறிதளவு உப்பு சேர்த்துக்கொள்ளலாம். வதங்கியதும் இதை அதே தட்டில் தனியாக எடுத்து ஆறவைக்கவும்.
  3. ஆறியதும் முதலில் வறுத்து வைத்த பொருட்களை மிக்சியில் சேர்த்து பொடியாக அரைத்து பிறகு வதக்கி ஆறவைத்ததை அத்துடன் சேர்த்து நைசாக மசாலா பதத்திற்கு அரைத்துக்கொள்ளவும்.
  4. ஒரு கடாயை அடுப்பில் வைத்து நல்எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சின்ன வெங்காயம் சேர்த்து வேகவிடவும். வெந்தவுடன் வெங்காயத்தை மட்டும் தனியாக வடிகட்டி எடுத்துக்கொள்ளவும்.
  5. அதே எண்ணெயில் கடுகு, வெந்தயம், தாளிப்பு வடகம் சேர்த்து பொரிந்ததும் பூண்டு, கருவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
  6. பூண்டு வதங்கியதும் அரைத்து வைத்த மசாலாவை சேர்த்து எண்ணெய் பிரிய வைக்கவும்.
  7. பிறகு அதில் புளி தண்ணீரை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி தேவையான அளவு உப்பு சேர்த்து பொடித்த வெள்ளம் சேர்த்து நன்கு மிதமான தீயில் கொதிக்கவிடவும்.
  8. எண்ணெய் பிரிந்து வந்தவுடன் தனியாக எடுத்து வைத்த வதக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து மிதமான தீயில் குழம்பு கெட்டி பதத்திற்கு வரும் வரை கொதிக்கவிடவும்.
  9. 10 நிமிடம் கொதித்ததும் அடுப்பை அணைக்கவும். இப்பொழுது சுவையான சின்ன வெங்காயம் கார குழம்பு தயார்.