காரசாரமான சேலம் தட்டு வடை செட் செய்வது எப்படி ?

Summary: ஒவ்வொரு மாநிலத்திலும், ஒவ்வொரு ஊர்களிலும் அந்த ஊருக்கென பிரபலமான ஒரு ஸ்னாக்ஸ் உணவு கண்டிப்பாக இருக்கும். அந்த வகையில் நம் தமிழகத்தில் உள்ள சேலத்தில் ரோட்டு ஓரமான கடைகளில் விற்கும் சேலம் தட்டுவடை மிகவும் பிரபலமானது. இன்று நாம் அந்த சேலம் தட்டுவடை பற்றி தான் பார்க்க இருக்கிறோம். இரண்டு தட்டையை வைத்து அதன் நடுவில் காய்கறி கலவையை வைத்து சிறிது சட்னியை வைத்து நாம் சாப்பிடும் போது அதன் ருசி அட்டகாசமான முறையில் இருக்கும். அதனால் இன்று சேலம் தட்டுவடை எளிமையான முறையில் வீட்டில் வைத்து எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

Ingredients:

  • 12 தட்டை
  • 1 கேரட்
  • 1 பீட்ரூட்
  • ½ மாங்காய்
  • 1 பெரிய வெங்காயம்
  • கொத்த மல்லி
  • ¼ கப் சாட் மாசாலா
  • ¼ கப் கார சட்னி
  • ¼ கப் புதினா சட்னி
  • 1 tbsp எலுமிச்சை சாறு
  • உப்பு

Equipemnts:

  • 1 பெரிய பவுள்
  • 2 பவுள்
  • 1 தட்டு

Steps:

  1. முதலில் நாம் எடுத்துக் கொண்ட கேரட், பீட்ரூட், மாங்காய் இந்த முன்று பொருட்களையும் துருவி. துருவிய பொருட்களை ஒரு பவுளில் சேர்த்து ஒரு கலவையாக கலந்து கொள்ளுங்கள்.
  2. அதன் பின்பு இதனுடன் நாம் வைத்திருக்கும் அரை டீஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் தேவையான அளவுக்கு உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
  3. அதன் பிறகு நாம் வைத்திருக்கும் தட்டையில் ஒரு தட்டையை எடுத்துக் கொண்டு அதன் மீது சிறிதளவு காரச் சட்னி தடவி கொள்ளுங்கள். அதன் பின்பு நாம் தயார் செய்து வைத்த காய்கறி கலவையை இதன் மேல் சிறிது வைத்துக் கொள்ளுங்கள்.
  4. அதன் பின்பு நாம் வைத்த காய்கறி கலவையின் மேல் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சிறிது வைத்து அதன் மேல் நாம் வைத்திருக்கும் சாட் மசாலாவை மழை சாரல் போல் தூவி விட்டுக் கொள்ளவும்.
  5. சாட் மசாலா தூவிய பின் நாம் வைத்திருக்கும் கொத்தமல்லி இலை நறுக்கி சிறிது மேல் இதான் வைத்து அதன் பின்பு இன்னொரு தட்டையை எடுத்து வைத்து.
  6. அதன் மேல் நாம் வைத்திருக்கும் புதினா சட்னியை தடவி நாம் தயார் செய்து வைத்திருக்கும் காய்கறியின் மேல் வைத்து மூடி விடவும் அவ்வளவுதான் காரசாரமான சேலம் தட்டுவடை இனிதே தயாராகிவிட்டது.