நாவில் எச்சில் வரவழைக்கும் ருசியில் வஞ்சிர மீன் குழம்பு ஒரு தரம் இப்படி செய்யுங்கள்!

Summary: பாரம்பரிய மீன் குழம்பு உணவு உண்மையில் நல்ல நினைவுகளைத் தருகிறது. அந்த நினைவுகள் தான் மீண்டும்புன்னகையை தருகிறது.  மதிய உணவில் இந்த வஞ்சரம்மீன் குழம்பை செய்து சாப்பிடீர்கள் என்றால் மீன் குழம்பு ரசிகராகிவிடுவீர்கள்.வீட்டில்உள்ள அனைவரும்  வெட்கமின்றி மூன்றில் ஒரு பங்குகூட கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள். வீட்டிற்கு விருந்தினர்கள் வந்தால்,, கண்டிப்பாகபார்சல் வாங்கி கொண்டு தான் செல்வார்கள். விருந்தினர் மகிழ்ச்சியாக மீன் குழம்பு சாப்பிடுவார்கள்.

Ingredients:

  • 500 கிராம் வஞ்சிரம் மீன்
  • 100 கிராம் சின்ன வெங்காயம்
  • 150 கிராம் நாட்டுத் தக்காளி
  • 100 கிராம் பெரிய வெங்காயம்
  • 8 பல் பூண்டு
  • 100 புளி
  • 4 காய்ந்த மிளகாய்
  • கறிவேப்பிலை
  • 100 மி.லி நல்லெண்ணெய்
  • 50 கிராம் வெந்தயம்
  • 2 தேக்கரண்டி மிளகாய்த் தூள்
  • 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள்
  • கடுகு
  • 2 தேக்கரண்டி தனியா

Equipemnts:

  • 1 கடாய்

Steps:

  1. பெரிய வெங்காயத்தை அரைத்து விழுதாக்கிக்கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, வெந்தயத்தைப்போட்டுப் பொரிக்கவும்.
  2. வெந்தயம் பொரிந்ததும், கடுகு, வெங்காய விழுதைச் சேர்க்கவும். சின்ன வெங்காயம், பூண்டு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை கலந்து வதக்கவும்.
  3. வெந்தயம்பொரிந்ததும், கடுகு, வெங்காய விழுதைச் சேர்க்கவும். சின்ன வெங்காயம், பூண்டு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை கலந்து வதக்கவும்.
  4. பிறகு,  மிளகாய்த்தூள், தனியா, மஞ்சள் தூள், நறுக்கிய தக்காளி சேர்த்து நன்கு வதக்கி, அரை டம்ளர் தண்ணீர் விடவும்.
  5. பின்னர் புளியைக் கரைத்து ஊற்றி, தேவையான அளவு உப்பு சேர்க்கவும். கலவை கொதித்து கிரேவியானதும், கழுவிய மீன்  துண்டுகளைபோட்டு,5 நிமிடங்கள் கொதிக்கவிடவும்.
  6. பிறகு கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து இறக்கலாம். சிலர் மீன் குழம்பில் தேங்காய் அரைத்து ஊற்றுவதுண்டு. தேவைப்பட்டால் 2 துண்டுகள் தேங்காய் விழுது அல்லது தேங்காய் பால் எடுத்தும்  சேர்க்கலாம்.