ருசியான நாட்டுக் கோழி ரசம் இப்படி செய்து பாருங்க, செய்யும் போதே வாசனை மூக்கை துளைக்கும்!

Summary: பிராய்லர் கோழியை விட நாட்டுக்கோழிக்கு சத்து மிகவும் அதிகம். நாட்டுக்கோழி அதன் இரையை தானே தேடி சாப்பிடுவதால் அதற்கான சத்து மிக மிக அதிகம். சளி இருமல் ஆகியவைக்கு இந்த நாட்டுக்கோழியை வைத்து சூப் அல்லது ரசம் செய்து சாப்பிட வேண்டும் இது மிகவும் எளிமையான செய்முறையாகும். உங்கள் வீட்டில் செய்யும் ரசம் பொடி செய்வது போல், நாட்டுக் கோழி ரசதிற்கும்  இந்த மசாலா தூள் அனைத்தும்  முக்கியப் பொருளாகும். ரசத்திற்கு தேவையான மசாலா தூள். நன்றாக அரைத்து நாட்டுக் கோழி ரசத்தில் சேர்த்தால், மிகவும் சுவையாக இருக்கும்.. வாங்க இதை எப்படி செய்வது என்று பார்ப்போம்.

Ingredients:

  • 1/2 கிலோ நாட்டுக் கோழி
  • 1 தேக்கரண்டி மிளகாய்த்தூள்
  • 1 பச்சை மிளகாய்
  • 1 தேக்கரண்டி தனியாத்தூள்
  • 1 தேக்கரண்டி மிளகுத்தூள்
  • 1 தக்காளி
  • 1 துண்டு இஞ்சி
  • 5 பல் பூண்டு
  • 10 சின்ன வெங்காயம்
  • 1 தேக்கரண்டி சீரகத்தூள்
  • 1 பட்டை
  • 1 லவங்கம்
  • 1/2 தேக்கரண்டி மஞ்சள்தூள்
  • உப்பு
  • எண்ணெய்

Equipemnts:

  • 1 குக்கர்

Steps:

  1. முதலில் இஞ்சி, பூண்டை விழுதாக அரைத்துக் கொள்ளவும். பின் கடாயில் எண்ணெய் ஊற்றி பட்டை, லவங்கம் சேர்த்து தாளித்து, இரண்டாக நறுக்கிய பச்சை மிளகாய்  வெங்காயம்சேர்த்து வதக்கவும்.
  2. பின் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும். பின் தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து நன்கு மசியுமாறு வதக்கிக் கொள்ளவும்.
  3. பின்னர் வதக்கிய கலவையை குக்கரில் போட்டு, மிளகுத்தூள், சீரகத்தூள், மிளகாய்த்தூள், தனியாத்தூள், மஞ்சள்தூள் சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.
  4. கோழிக்கறி சேர்த்து நன்கு கலக்கி , கோழிக்கறி மூழ்கும் அளவிற்கு தண்ணீர்சேர்த்து .,உப்பு தேவையான அளவுசேர்த்து கலக்கி, உப்புருசி சேரி பார்த்து கொக்கரை மூடவும்.
  5. 6 விசில் வரும் வரை வேக விடவும். ரசத்தை இறக்கி , கறி நன்கு வெந்து விட்டதா என்று சரி பார்த்து இறங்கவும். பின்பு ரசத்தில் எலுமிச்சை சாறு பிழிந்து ,மிளகு தூள் சிறுது சேர்த்து பரிமாறவும்.