பாரம்பரிய ருசியில் பிடி கருணைக்கிழங்கு மசியல் ஒருமுறை இப்படி செய்து பாருங்கள்!

Summary: கிழங்கு வகைகளிலே இந்தக் கருணை கிழங்கு மட்டுமே உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டிய ஒரு அற்புத பொருளாகும்.பெரும்பாலும் கிழங்கு வகைகளை உணவில் சேர்த்துக் கொள்ளக் கூடாது என்று பலரும் கூறுவார்கள்.ஏனென்றால் கிழங்கு வகைகளை உணவில் சேர்ப்பதன் மூலம் வாய்வு பிரச்சனைகள், சதைப்பிடிப்புஉண்டாகும். ஆனால் கருணை என்றால் நோயில் கருணை காட்டுவது என்றும் கூட சொல்லலாம். உடல்சூட்டினை தணிக்கும் இந்த கருணைக்கிழங்கின் நன்மைகள் சித்தா மற்றும் ஆயுர்வேதத்தில்ஏராளமாக உள்ளன. இவ்வாறான கருணைக்கிழங்கை வைத்து சுவையான மசியலை எவ்வாறு செய்வது என்பதைகற்றுக் கொள்வோம் வாருங்கள்.

Ingredients:

  • 4 கருணைக்கிழங்கு
  • 1 பெரிய வெங்காயம்
  • பாதிமூடி, எலுமிச்சம்பழம்
  • 4 பச்சை மிளகாய்
  • சிட்டிகை மஞ்சள்தூள்
  • 1/2 டீஸ்பூன் கடுகு
  • 1/2 டீஸ்பூன் உளுத்தம்பருப்பு
  • சோம்பு
  • 1 ஆர்க்கு கறிவேப்பிலை
  • 1/4 கப் எண்ணெய்
  • 1 காய்ந்த மிளகாய்

Equipemnts:

  • 1 கடாய்

Steps:

  1. கருணைக்கிழங்கை வேகவைத்து தோல் உரித்து மசிக்கவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கவும். பச்சைமிளகாயை இரண்டாக நறுக்கவும். எலுமிச்சம்பழத்துடன் மஞ்சள் தூள், 1 டம்ளர் தண்ணீர் கலந்து,அதில் மசித்த கிழங்கை சேர்க்கவும்.
  2. வாணலியில் எண்ணெய் விட்டு தாளிப்பவற்றை தாளித்து வெங்காயம்,பச்சை மிளகாய் வதக்கி கரைத்த கிழங்கு மசாலாவை அதில் ஊற்றி உப்பு சேர்த்து நன்கு வேகவிடவும்.
  3. கிழங்கு வெந்துஅடிப்பிடிக்காமல் சுருள வெந்ததும் இறக்கி பரிமாறவும். செட்டிநாட்டில் மிக பிரபலமான அயிட்டம்இது.