பஞ்சு போன்று ருசியான சூரை மீன் தந்தூரி, வீட்டிலேயே சுலபமாக இப்படி செய்து பாருங்க!

Summary: கடைகளில் கிடைக்க கூடிய தந்தூரி உணவில் கலர் சேர்த்து சமைப்பார்கள். பார்ப்பதற்கு சாப்பிட தூண்டவும் சுவை கூடவும்  சேர்த்துஎப்படி செய்தார்களோ என்று நமக்குத் தெரியாது. ஆனால் கட்டாயமாக உடல் ஆரோக்கியத்திற்கு கேடு என்பது மட்டும் உண்மை. இது போன்ற உணவுகளை நாம் வாங்கி கொடுப்பது ஆரோக்கியத்திற்கு கேடு . தந்தூரி, ஷவர்மா போன்ற வெரைட்டிகளை நம்மால் வீட்டில் செய்ய முடியும் .   குழந்தைகளின்உடலுக்கு நல்லது. சூறை மீனில் தண்டொரு செய்த்து பாருங்கள். சுவை அட்டகாசமாக இருக்கும். வாங்க இதை  எப்படிசெய்வது என்று பார்ப்போம்.

Ingredients:

  • 1 கரண்டி மஞ்சள் தூள்
  • 4 வெள்ளை சூரை மீன்
  • ஒரு கைப்பிடி மல்லி புதினா
  • உப்பு
  • 2 தேக்கரண்டி மிளகு
  • 10 பல் பூண்டு
  • 4 கரண்டி வினிகர்
  • 50 கிராம் பச்சை மிளகாய்

Equipemnts:

  • 1 அவன் / தோசை கல்

Steps:

  1. முதலில் மீனை சுத்தம் செய்து இரண்டு பக்கமும் கீறி வைக்கவும்.அரைக்க சொல்லியுள்ள பொருள்களை அரைக்கவும். மீனில் அரைத்த மசாலா தூள்கள் வினிகர் சேர்த்து நன்கு பிரட்டி இரண்டு மணிநேரம் ஊறவைக்கவும்.
  2. பின் கிரில் தட்டில் சிறிது எண்ணெய் தடவி பிரட்டிய மீனை வைக்கவும். அவெனை 280 சூடாக்கி அதில் மீனை வைக்கவும். அவன் இல்லை என்றல் திசை கல்லில் சுட்டு எடுக்கலாம்.
  3. பின்பு பத்து நிமிடத்திற்கு ஒரு முறை திருப்பி போடவும் மீன் தண்ணீர் விடும் எல்லா தண்ணீரும் வற்றி இரண்டு பக்கமும் சிவக்கும் வரை வைத்திருந்து எடுத்து பின்பு பரிமாறவும்.