குட்டி உருளைக்கிழங்கு வறுவல் ஒரு தரம் இப்படி செய்து பாருங்கள்!

Summary: காய்கறிகளில்பலவிதமான வகைகள் இருந்தாலும், அனைவருக்கும் பிடித்த ஒன்று என்றால் அது உருளைக்கிழங்குதான். அதிலும் தயிர் சாதம், சாம்பார் சாதம், ரசம் சாதம், புளி சாதம், எலுமிச்சை சாதம்,தேங்காய் சாதம் என அனைத்து வகையான சாதத்துடனும் தொட்டுக்கொண்டு சாப்பிட இந்த உருளைக்கிழங்குவறுவல் ஒன்று மட்டும் இருந்தால் போதும். அவ்வகையில் குட்டி உருளைகிழங்கை வைத்து தான்ஒரு வறுவல் செய்து பார்க்க போகிறோம். நீங்கள் எப்போதும் செய்யும் அளவில் செய்தாலும்நிச்சயம் பத்தவே பத்தாது. இதன் சுவை அவ்வளவு ருசியாக இருக்கும். வாருங்கள் இதனை எவ்வாறுசெய்ய வேண்டும் என்று பார்ப்போம்

Ingredients:

  • 1/4 கிலோ குட்டி உருளைக்கிழங்கு
  • 1 கிலோ மிளகாய்தூள்
  • 4 கிலோ தேங்காய் எண்ணெய்
  • 1/4 கிலோ உப்பு

Equipemnts:

  • 1 கடாய்

Steps:

  1. குட்டி உருளைக்கிழங்க நன்றாக நான்கைந்து முறை மண் போகக் கழுவி, தோல் வெள்ளை வெளேர் என்று வந்ததும் தோலை சீவிக்கொள்ளுங்கள். (விருப்பப்பட்டால் தோலுடனும் வறுக்கலாம். சுவையாக இருக்கும்).
  2. ஒரு கூர்மையான குச்சி அல்லது ஊசியால், உருளைக்கிழங்கில் 10 இடங்களில் குத்தி துவாரமிடுங்கள். (அப்போதுதான் உப்பு, காரம் கிழங்கினுள் சார்ந்து நன்றாகஇருக்கும்).
  3. பிறகு,கிழங்குடன் மிளகாய்தூள், உப்பு சேர்த்துப் பிசறி, 3-4 மணி நேரம்ஊறவிடுங்கள். ஊறியவுடன், கிழங்கு தண்ணீர் விட்டிருக்கும். எண்ணெயைக் காயவைத்து, கிழங்கை(கசிந்திருக்கும் தண்ணீருடன்) சேர்த்து, நன்கு கிளறி வேகவிடுங்கள். தண்ணீர் வற்றியதும், தீயைக்குறைத்து, நன்கு சுருள 'மொறுமொறு'வென வதக்கியெடுங்கள்.