கிராமத்து பருப்பு உருண்டை குழம்பு இப்படி செய்து பாருங்க அசத்தலாக இருக்கும்!

Summary: பெரும்பாலும் மதிய உணவுக்கு சாம்பார், காரக்குழம்பு என சாப்பிட்டு போர் அடித்துவிட்டதா? அப்போது பருப்பு உருண்டை குழம்பு செய்துபாருங்கள். இந்த குழம்பை சாதத்துடன் சேர்த்து சாப்பிட அட்டகாசமாக இருக்கும். இது தமிழ்நாட்டின் புகழ்பெற்ற காரைக்குடி வகையை சேர்ந்த டிஷ். கடலைப் பருப்பு, துவரம் பருப்பில் புரதச் சத்து அதிகம் காணப்படுகிறது. இதனை அரைத்து உருண்டை பிடித்து குழம்பாக செய்து கொடுப்பது சுவையோடு தேவையான சத்துக்களும் கிடைக்கும். இக்குழம்பினை சாதத்தில் ஊற்றி உண்ணும் போது தனியாக பொரியலோ, கூட்டோ செய்யத் தேவை இல்லை. இதில் உள்ள பருப்பு உருண்டைகளையே தொட்டுக்கறியாக உண்ணலாம்.

Ingredients:

  • 3/4 கப் துவரம் பருப்பு
  • 1/4 கப் கடலை
  • 5 வர மிளகாய்
  • புளி
  • 3 டீஸ்பூன் சாம்பார் தூள்
  • 2 டீஸ்பூன் அரிசி மாவு
  • 2 டேபிள் ஸ்பூன் தேங்காய்
  • 2 டீஸ்பூன் எண்ணெய்
  • 1/2 டீஸ்பூன் கடுகு
  • 1 டீஸ்பூன் சீரகம்
  • உப்பு
  • 1 சிட்டிகை பெருங்காயம்
  • கறிவேப்பிலை, கொத்தமல்லி

Equipemnts:

  • 1 பவுள்
  • 1 மிக்ஸி
  • 1 வாணலி
  • 1 கரண்டி

Steps:

  1. முதலில் புளியை நன்கு கரைத்து வைத்துக் கொள்ளவும்.
  2. பருப்பை 1/2 மணிநேரம் தண்ணீரில் ஊரவிட்டு வடிகட்டி ஒரு மிக்ஸியில் வர மிளகாய், கொஞ்சம் உப்பு சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
  3. அரைத்த பருப்புடன் அரிசிமாவு கலந்து நன்கு பிசைந்து சிறு உருண்டைகளாக பிடித்து வைத்துக் கொள்ளவும்.
  4. ஒரு மிக்ஸி ஜாரில் தேங்காய், சாம்பார்தூள் கொஞ்சம் தண்ணி விட்டு விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
  5. பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, சீரகம் சேர்த்து வெடித்த பிறகு பெருங்காயம் மஞ்சள்தூள் சேர்த்து வறுக்கவும்.
  6. பிறகு அத்துடன் புளி தண்ணீர் விட்டு கொதிக்க விடவும். கொதிக்கிற புளி தண்ணீரில் தேவையான உப்பு சேர்த்து உருட்டி வைத்திருக்கும் பருப்பு உருண்டைகளை மெதுவாக ஒவொன்றாக சேர்த்து மிதமான சூட்டில் வேக விடவும்.
  7. நன்கு வெந்த பிறகு உருண்டைகள் மேல் எழும்பி வரும். அப்போது அரைத்த தேங்காய் விழுதை சேர்த்து ஒரு கொதி வந்ததும் பச்சை கொத்தமல்லி சேர்த்து அடுப்பை அணைத்து விடவும்.
  8. சுவையான பருப்பு உருண்டை குழம்பு தயார். சாத்தில் நெய் ஊற்றி கிரேவியை விட்டு பிசைந்து உருண்டையை தொட்டு சாப்பிட மிக அருமையாக இருக்கும்.