ருசியான அவரைக்காய் குருமா, ஒரு முறை இப்படி வித்தியாசமா செஞ்சு பாருங்க!

Summary: அவரைக்காய்வைத்து நாம் பொரியல் சாம்பார் போன்றவை தான் வைத்திருக்கிறோம்,  இதுபுது வகையில் அவரைக்காய் குருமா . ஒருமுறை அவரைக்காய் வைத்து குருமா செய்து பாருங்கள் மிகவும் ருசியாக இருக்கும். அவரைக்காயில் உள்ள பல சத்துக்கள் நமக்கு கிடைக்கப்படுவதுடன், இட்லி தோசை சப்பாத்தி போன்றவைக்கு இந்த அவரைக்காய் குருமா மிகவும் ஏதுவாக இருக்கும். வாங்க இதை எப்படி செய்வதுஎன்று பார்க்கலாம்.

Ingredients:

  • 1 கப் அவரைக்காய்
  • 1 வெங்காயம்
  • 3 ஸ்பூன் தேங்காய்த்துருவல்
  • 1 ஸ்பூன் கசகசா
  • 10 முந்திரி
  • 2 மிளகாய்
  • 1/2 ஸ்பூன் கடுகு
  • கறிவேப்பில்லை
  • 1/2 ஸ்பூன் சோம்பு

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 மிக்ஸி

Steps:

  1. கசகசாவை கடாயில் வறுத்துக் கொள்ளவும் பின்பு முந்திரி கசகசாவை ஊற வைத்துக் கொள்ளவும்.
  2. ஒருமிக்ஸி ஜாரில் முந்திரி கசகசா தேங்காய் துருவல் மிளகாய் சேர்த்து அரைக்கவும் சோம்பு சேர்த்துக் கொள்ளவும்.
  3. சோம்பு பொரிந்ததும் வெங்காயம் சேர்த்து வதக்கவும் வெங்காயம் வதங்கியதும் அவரைக்காயை சேர்த்து வதக்கவும் உப்பு போடவும் சிறிது வெந்ததும் தண்ணீர் சேர்த்து நன்கு வேக விடவும்.
  4. அரைத்தமசாலாவையும் சேர்த்து வேகவிடவும் உப்பு சேர்க்கவும் .நன்கு கொதித்த பின் இறக்கினால் அவரைக்காய் குருமா ரெடி.