மதிய உணவுக்கு ருசியான மிக்ஸ்டு காய்கறி கூட்டு இப்படி செஞ்சி பாருங்க!

Summary: பொதுவாக தினமும் ஒரு காய்கறியை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது என கூறுவார்கள் ஆனால் இன்று நாம் ஒன்றுக்கும் மேற்பட்ட காய்கறிகளை சேர்த்து சமைத்து கூட்டு செய்ய போகிறோம். இதை நாம் உணவாக எடுத்துக் கொள்வதன் மூலம் நம் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு உதவுகிறது. மேலும் இதன் சுவைக்கும் பஞ்சம் இல்லாமல் காரசாரமாக அட்டாசமான சுவையில் இருக்கும். இது உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும். இனி மறுநாள் கூட்டாக அந்த காய்கறி சமைக்கலாமா இந்த காய்கறிகளை சமைக்கலாமா என்று யோசிக்காமல் மொத்த காய்கறிகளும் ஒன்றாக சேர்த்து இதை சமைத்து விடுங்கள்.

Ingredients:

  • 2 tbsp எண்ணெய்
  • ¼ tbsp கடுகு
  • 1 பெரிய வெங்காயம்
  • 1 tbsp இஞ்சி பூண்டு விழுது
  • 1 கொத்து கருவேப்பிலை
  • 1 தக்காளி
  • ¼ tbsp மஞ்சள் தூள்
  • ½ tbsp கரம் மசாலா
  • ½ tbsp சீரகத்தூள்
  • 2 tbsp மிளகாய் தூள்
  • 1 கேரட்
  • ¼ கப் காலிஃபிளவர்
  • 6 பீன்ஸ்
  • 1 உருளைக்கிழங்கு
  • ½ கப் பட்டாணி
  • 1 கப் தண்ணீர்
  • உப்பு

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 பெரிய பவுள்

Steps:

  1. முதலில் நாம் எடுத்துக் கொண்ட காய்கறிகளை நன்கு கழுவி சுத்தப்படுத்திக் கொண்டு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளுங்கள். அதன் பின்பு ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் இரண்டு டீஸ்பூன் அளவு எண்ணெய் ஊற்றி கொள்ளவம்.
  2. பின் எண்ணெய் நன்கு காய்ந்ததும் அதனுடன் கால் டீஸ்பூன் கடுகு சேர்க்கவும் பின் கடுகு நன்றாக பொரிந்து வந்தவுடன், பொடியாக நறுக்கிய ஒரு பெரிய வெங்காயம், ஒரு டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது மற்றும் ஒரு கொத்து கருவேப்பிலை சேர்த்து வெங்காயம் பொன்னிறமாக வரும் வரை வதக்கிக் கொள்ளுங்கள்.
  3. பின் வெங்காயம் நன்றாக வதங்கியதும் நறுக்கிய ஒரு தக்காளியை சேர்த்து வதக்கிக் கொள்ளவும். தக்காளி நன்கு மசிந்து வந்ததும் இதனுடன் கால் டீஸ்பூன் அளவு மஞ்சள் தூள், அரை டீஸ்பூன் கரம் மசாலா, அரை டீஸ்பூன் சீரகம் தூள் மற்றும் இரண்டு டீஸ்பூன் அளவு மிளகாய் தூள் சேர்த்து நன்கு கிளறி விட்டு வதக்கவும்.
  4. பின் மசாலா பொருட்கள் நன்கு வதங்கியதும் நாம் நறுக்கி வைத்திருக்கும் காய்கறிகளான கேரட், காலிஃபிளவர், பீன்ஸ், உருளைக்கிழங்கு, பட்டாணி, ஒரு கப் தண்ணீர் மற்றும் கடைசியாக தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து நன்றாக கிளறி விடுங்கள்.
  5. பின் கடாயை மூடி வைத்து காய்கறிகள் நன்றாக வதங்கி தண்ணீர் வற்றும் வரை வேக வைத்துக் கொள்ளுங்கள். அவ்வளவுதான் சுவையான மிக்ஸ்டு காய்கறி கூட்டு இனிதே தயாராகிவிட்டது.