வீடே கமகமக்கும் மீன் வறுவல் செய்வது எப்படி ?

Summary: ஒரு சில பேருக்கு மீன் வருவல் செய்ய எந்த விதத்தில், எந்த அளவில் மசாலா தயார் செய்ய வேண்டும் அதை எப்படி செய்வது என்பதில் பெரும் சந்தேகம் இருக்கும். அதனால் இன்று இந்த கிரிஷ்பியான மீன் வறுவல் பற்றி தான் பார்க்க இருக்கிறோம். இதில் கொடுக்கப்பட்டுள்ள மசாலா பொருட்களை அதன் அளவில் கலந்து நீங்கள் மீன் வறுவல் தயார் செய்து சாப்பிட்டு பாருங்கள் அதன் சுவையே சொல்வதற்கு வார்த்தைகளே இல்லை. அந்த அளவிற்கு உச்களுக்கு பிடித்த சுவையில் இருக்கும் ஆகையால் இன்று இந்த மீன் வறுவல் எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

Ingredients:

  • ½ KG மீன் துண்டுகள்
  • ¼ tbsp மஞ்சள் தூள்
  • 1 tbsp மல்லி தூள்
  • 1 tbsp மிளகாய் தூள்
  • 2  tbsp இஞ்சி பூண்டு விழுது
  • கருவேப்பிலை
  • ½ பழம் எலுமிச்சை சாறு
  • 1 tbsp மிளகு தூள்
  • உப்பு
  • எண்ணெய்

Equipemnts:

  • 1 தோசை கல்
  • 1 பெரிய பவுள்
  • 1 பெரிய தட்டு

Steps:

  1. மீன் வறுவல் செய்வதற்கு பெரிய துண்டுகளாக வருமாறு மீன்களை கடையிலேயே சுத்தப்படுத்தி வெட்டி வாங்கிக் கொள்ளுங்கள், அதன் பின்பு வீட்டிலும் இரு முறை தண்ணீர் வைத்து நன்கு அலசி கொள்ளுங்கள்.
  2. அதன் பின் ஒரு பெரிய பவுள் எடுத்து கொண்டு அதில் அரை டீஸ்பூன் மஞ்சள் தூள், ஒரு டீஸ்பூன் மல்லித்தூள், ஒரு டீஸ்பூன் மிளகாய்த்தூள், இரண்டு டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது, பொடியாக நறுக்கிய சிறிது கருவேப்பிலை, ஒரு டீஸ்பூன் மிளகுத்தூள் மற்றும் தேவையான அளவு உப்பு போன்ற பொருள்களை எல்லாம் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
  3. பின் நாம் கலந்து வைத்திருக்கும் மசாலாவில் அரை எலுமிச்சம் பழத்தின் பழச்சாறு மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து மசாலாவை பேஸ்ட் போல் தயார் செய்து கொள்ளுங்கள்.
  4. பின் நாம் வைத்திருக்கும் மீனை ஒன்று ஒன்றாக எடுத்து மீன் துண்டுகளில் அனைத்து இடங்களிலும் மசாலா படும்படியாக மசாலாவில் நன்கு பிரட்டி எடுத்துக் கொள்ளுங்கள். இப்படியாக மீதம் இருக்கும் மீன்களையும் பிரட்டி எடுத்துக் கொண்டு ஒரு தட்டில் வைத்துக் கொள்ளுங்கள்.
  5. இப்படி நாம் மசாலாவில் பிரட்டி எடுத்த மீனை 30 நிமிடங்கள் நன்கு மசாலாவுடன் ஊற வைத்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு ஒரு தோசை கல்லை அடுப்பில் வைத்து தோசைக்கல் சூடேறியதும் அதில் இரண்டு டீஸ்பூன் அளவில் எண்ணெய் ஊற்றி கொள்ளவும்.
  6. பின் எண்ணெய் காய்ந்ததும் முன்று மீன் துண்டுகளை வைத்து பொரிந்து கொள்ளுங்கள். இரண்டு பக்கமும் மீன் நன்றாக வெந்து வருமாறு திருப்பிப் போட்டு எடுத்துக் கொள்ளுங்கள் அவ்வளவுதான் சுவையான மீன் வருவல் தயாராகிவிட்டது.