ருசியான பக்கோடா குழம்பு இனி இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி தான்!!

Summary: பக்கோடா குழம்பு என்பது மசாலா புளி குழம்பு வறுத்த பக்கோடாவை ஊறவைத்து செய்யப்படும் கிரேவியைத் தவிர வேறில்லை. பக்கோடாவை சனா பருப்பைப் பயன்படுத்தி வீட்டிலேயே செய்யலாம் இந்த பக்கோடா வைத்து செய்யப்படும் எந்த உணவு வகையும் மிகவும் ருசியாக இருக்கும்.இதில் சேர்க்கப்படும் பொருட்கள் குறைவாக இருந்தாலும் பக்கோடா அனைத்து மசாலாக்களையும் ஈர்க்கும் தன்மை கொண்டதால், மிகுந்த சுவையுடன் இருக்கும். எனவே குழம்பும் படு ருசியாக இருக்கும். ஈசியாக செய்யக்கூடிய குழந்தைகள் முதல் வீட்டில் இருக்கும் பெரிவர்கள் வரை அனைவருக்கும் விருப்பி சாப்பிடும் படியாக இந்த சுவையான பக்கோடா குழம்பு செய்து சாப்பிட்டு பாருங்கள் அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள்.

Ingredients:

  • ¼ kg கடலை பருப்பு
  • 3 பூண்டு
  • ¼ tsp இஞ்சி
  • 1 tsp மஞ்சள் தூள்
  • ½ cup துருவிய தேங்காய்
  • 3 பச்சை மிளகாய்
  • 5 காய்ந்த மிளகாய்
  • 1 tbsp தனியாத் தூள்
  • 1 tsp கசகசா
  • 10 முந்திரி பருப்பு
  • 1 tsp சோம்பு
  • 1 tsp சீரகம்
  • 1 cup நறுக்கிய வெங்காயம்
  • 1 cup நறுக்கிய தக்காளி
  • ½ tsp கடுகு
  • 1 tsp பட்டை
  • ½ tsp உளுந்து
  • 1 tsp கிராம்பு
  • 1 tsp ஏலக்காய்
  • கொத்த மல்லி சிறிதளவு
  • புதினா சிறிதளவு
  • 3 tbsp நல்எண்ணெய்
  • எண்ணெய் பொரிப்பதற்கு
  • தேவையான அளவு உப்பு

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 கரண்டி

Steps:

  1. ராஜபாளையம் பக்கோடா குழம்பு செய்ய முதலில் கடலைப் பருப்பை ஒரு மணிநேரம் ஊறவைத்து அதனுடன் காய்ந்த மிளகாய், உப்பு, சீரகம், சோம்பு இவற்றைச் சேர்த்து அரைத்து வைத்து கொள்ள வேண்டும்.
  2. ஒரு கடாயில் எண்ணெயைக் காயவைத்து, அரைத்த பருப்பு விழுதைச் சிறுசிறு உருண்டைகளாகப் போட்டு பொரித்து எடுக்க வேண்டும்.
  3. இஞ்சி பூண்டை நசுக்கி வைத்து கொள்ளவும். மற்றொரு கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து சேர்த்துத் தாளிக்க வேண்டும்.
  4. இஞ்சி பூண்டை நசுக்கி வைத்து கொள்ளவும். மற்றொரு கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து சேர்த்துத் தாளிக்க வேண்டும்.
  5. இதனுடன் பச்சை மிளகாய், கசகசா, முந்திரி, தேங்காய் இவற்றை அரைத்துச் சேர்த்து, தனியாப் பொடி, தண்ணீர் சேர்த்து கொதிக்கவிட வேண்டும்.
  6. பிறகு தேவையான உப்பு, சேர்த்து, பொரித்த உருண்டைகளையும் போட்டு கொதித்ததும் புதினா, கொத்தமல்லி இலை தூவி இறக்கவும். சுவையான பக்கோடா குழம்பு தயார்.