ஸ்நாக்ஸாக சாப்பிட ருசியான ஒட்ஸ் பணியாரம் இப்படி ஈஸியாக வீட்டிலே செய்து பாருங்க!

Summary: இன்றையகாலக்கட்டத்தில், பெரும்பாலான மக்கள் தங்கள் ஆரோக்கியத்தை கவனித்துக்கொண்டு ஆரோக்கியமான உணவை சாப்பிட விரும்புகிறார்கள். அத்தகைய சூழ்நிலையில், ஓட்ஸ் அவர்களுக்கு சிறந்த வழி. ஓட்ஸ் உங்களை ஆரோக்கியமாகவும், நீண்ட நேரம் பசியின்றி வைத்திருக்கும். ஆனால் ஒவ்வொரு முறையும் ஒரே மாதிரியான ஓட்ஸை சாப்பிட்டு சலிப்படைந்தோருக்கு ஓட்ஸில் செய்யப்பட்ட மிகவும் சுவையான ஓட்ஸ் பணியாரம் செய்முறை பகிர்ந்துள்ளோம். இது உங்கள் நேரத்தை மிச்சப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், உங்கள் உடலையும் ஆரோக்கியமாக வைத்திருக்கும். எனவே ஓட்ஸ் பணியாரம் செய்வது எப்படி என்று பார்ப்போம்.

Ingredients:

  • 1 டம்ளர் ஓட்ஸ்
  • 1/4 கப் ரவை
  • 1 டம்ளர் பச்சரிசி மாவு
  • உப்பு
  • 1/2 கப் தயிர்
  • 1 தேக்கரண்டி எண்ணெய்
  • 1 தேக்கரண்டி கடுகு
  • 1 தேக்கரண்டி கடலைப்பருப்பு
  • 1 தேக்கரண்டி வெள்ளை உளுத்தம்பருப்பு
  • 2 பச்சைமிளகாய்
  • 1/2 தேக்கரண்டி இஞ்சி, பூண்டு விழுது
  • 1/2 இணுக்கு கறிவேப்பிலை
  • காயம்
  • 1/2 கப் வெங்காயம்

Equipemnts:

  • 1 பவுள்
  • பணியார கல்

Steps:

  1. ஓட்ஸையும் ரவையையும் தனித்தனியே வறுக்கவும், பிறகு ஒன்றாகத் திரிக்கவும். அரைத்தக் கலவையை ஒரு பாத்திரத்தில் கொட்டி அரிசிமாவையும் சேர்க்கவும்.
  2. இவற்றுடன் தயிர், உப்பு,தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் கலக்கவும். எண்ணெயில் தாளிசப் பொருட்களைத் தாளித்துக் கொண்டு வெங்காயத்தையும் நன்றாக வதக்கவும்.
  3. வதக்கின பொருட்களை ஓட்ஸ் கலவையுடன் சேர்த்து அடுப்பை ஏற்றி மிதமான தீயில் ஓரிரு நிமிடங்கள் பச்சை வாடப் போக வதக்கவும்.
  4. குழிப்பணியாரச் சட்டியில்எண்ணெய் விட்டு ஓட்ஸ் மாவை ஒவ்வொரு குழியிலும் விடவும் வெந்தபிறகு திருப்பிப் போடவும் சுவையான ஓட்ஸ் பணியாரம் தயார். மிளகாய்ப்பொடி, சட்னி சிறந்த இணையுணவுகள்.