இப்படி கூட செய்யலாமா ருசியான அரைக்கீரை-உருளை சாப்ஸ்  இப்படி செய்து பாருங்க!

Summary: பெரும்பாலும் உணவில் பருப்பு, சாதம், ரொட்டி ஆகியவற்றுடன் காய்கறிகளைச் சேர்க்க விரும்புகிறாம். அவ்வகையில் அரைக்கீரை-உருளை சாப்ஸ் ரெசிபி இட்லி தோசை, சாதத்திற்கு உகந்ததாக இருக்கும்.. அரைக்கீரை-உருளை சாப்ஸ் காரமான மற்றும் சுவையானது. அதே சமயம் வெறும் 15 நிமிடங்களில் செய்து பரிமாறலாம். எனவே அரைக்கீரை-உருளை சாப்ஸ் செய்யும் செய்முறையை தெரிந்து கொள்வது மூலம் மிகவும் சுவையாகவும் காரமான இணை உணவை செய்யலாம்.

Ingredients:

  • 1/4 கிலோ உருளைக்கிழங்கு
  • 1 கைப்பிடி அரைக்கீரை
  • 4 பச்சை மிளகாய்
  • 10 சின்ன வெங்காயம்
  • 1/2 கப் தேங்காய்ப்பால்
  • 1/4 டீஸ்பூன் மிளகாய்தூள்
  • 1 சிட்டிகை மஞ்சள்தூள்
  • உப்பு
  • எண்ணெய்
  • 1/2 டீஸ்பூன் கடுகு
  • 1/2 டீஸ்பூன் உளுத்தம்பருப்பு

Equipemnts:

  • 1 கடாய்

Steps:

  1. உருளைக்கிழங்கை வேகவைத்து, தோல் நீக்கி, உதிர்த்துக் கொள்ளுங்கள்.அரைக்கீரையைக் கழுவி, பொடியாக நறுக்குங்கள்.
  2. வெங்காயம்,பச்சை மிளகாயையும் பொடியாக நறுக்குங்கள். கடாயில் கால் கப் எண்ணெய் விட்டு, கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்து, வெங்காயம்,பச்சை மிளகாய் போட்டு வதக்கி, கீரையைப் போட்டு மிளகாய்தூள், உப்பு போட்டு கிளறிமூடிவையுங்கள்.
  3. கீரை வெந்த பிறகு, உருளைக்கிழங்கைப் போட்டு, தேங்காய்ப் பால் விட்டு, சுருளக் கிளறுங்கள். தீயைக் குறையுங்கள், எண்ணெய் போதவில்லை என்றால், இன்னும் கொஞ்சம் எண்ணெய் ஊற்றி, சிவக்கக் கிளறி இறக்குங்கள். …