ஆந்திரா கோங்கூரா சிக்கன் இப்படி செஞ்சி பாருங்க! மிச்சம் வைக்கால் சாப்பிடுவார்கள்!

Summary: காரசாரமான ஆந்திரா ஸ்பெஷல் கோங்கூரா சிக்கன் செய்ய கோங்குரா என்பது மிகவும் பிரபலமான மற்றும் ருசியான கீரை வகையாகும் இந்த கோங்குரா இலைகள் புளிப்பு சுவை கொண்டது மற்றும் பருவமழைக் காலத்தில் ஏராளமாக கிடைக்கும். இது ஆந்திரப் பிரதேசத்தில் தயாரிக்கப்படும் உணவாகும், மிக எளிதாகவும் விரைவாகவும் தயாரிக்கப்படும் . குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கோங்கூரா சிக்கன் விரும்பி உண்பர். அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள்.அதனால் இன்று இந்த கோங்கூரா சிக்கன் செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

Ingredients:

  • ½ kg சிக்கன்
  • 1 கட்டு புளிச்சக்கீரை/கோங்குரா
  • 2 வெங்காயம்
  • 5 பச்சை மிளகாய்
  • 1 tbsp இஞ்சி பூண்டு
  • ¼ tsp மஞ்சள் தூள்
  • ½ tsp மிளகாய்த்தூள்
  • ½ tsp சீரகத்தூள்
  • 2 tsp தனியாத்தூள்
  • ½ tsp கரம் மசாலா
  • 5 tbsp தேங்காய் எண்ணெய்
  • உப்பு

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 கரண்டி

Steps:

  1. கோங்கூரா சிக்கன் செய்ய முதலில் கீரையை நன்றாக மண் போக அலசிக் கொள்ள வேண்டும். பின் சிக்கனை நன்கு அலசி கொள்ள வேண்டும்.
  2. பின்பு இலையின் காம்பை நறுக்கி எடுத்து கீரையை மட்டும் உபயோகிக்க வேண்டும். பின் முதலில் கீரையை வதக்கி அரைக்க வேண்டும்.
  3. ஒரு வாணலியில் எண்ணெய் 2 டேபிள் ஸ்பூன் விட்டு, இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் வெங்காயம் போட்டு வதக்க வேண்டும்.
  4. அத்துடன் கீரையை சேர்க்கவும். சிறிது உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். இந்த கீரை நல்ல புளிப்பாக இருக்கும். நன்கு வதக்கி ஆற வைக்க வேண்டும்.
  5. பின்னர் மிக்ஸியில் அரைத்து எடுக்கவும். ஒரு வாணலியில் 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு காய்ந்ததும் வெங்காயம் சேர்த்து சிவக்க வதக்கி இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும்.
  6. அதன் பின் மஞ்சள் தூள் சேர்க்க வேண்டும். பிறகு சிக்கன் சேர்த்து மீண்டும் பிரட்டி வதக்கவும். பின்னர் மிளகாய்த்தூள், சீரகத்தூள், தனியாத்தூள், கரம் மசாலாத்தூள் சேர்க்க வேண்டும்.
  7. அதன் பிறகு சுவைக்கு ஏற்ப உப்பு சேர்க்க வேண்டும். வேகவைத்து, சிக்கன் வெந்த பின்பு தயார் செய்த கோங்குரா விழுதை சேர்க்கவும்.
  8. நன்கு கொதித்து சிக்கனும் கீரை விழுதும் சேர வேண்டும். சுவையான ஆந்திரா ஸ்பெஷல் கோங்கூரா சிக்கன் தயார்.