சுவையான பிளேவர்டு ஐஸ் டீ எப்படி செய்வது ?

Summary: என்ன தான் நம் வீடுகளில் சுவையாக மணமாகவும் டீ போட்டாலும். ஆண்கள் வெளியில் சென்று குடிக்காமல் இருக்க மட்டார்கள். ஆனால் கோடை காலங்களில் பெரும்பாலும் டீ குடிப்பதை யாரும் பெரிதும் விரும்ப மாட்டார்கள் ஆனால் அவர்களுக்கு ஏற்றவாறு நீங்கள் கோடை காலத்திலும் டீ தயார் செய்து கொடுக்கலாம். ஆம், இன்று ஐஸ் டீ பற்றிதான் தான் பார்க்க இருக்கிறோம் ஆகையால் இன்று புதினா ஐஸ் டீ மற்றும் ஆரஞ்சு ஐஸ் டீ எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

Ingredients:

  • 3 கப் தண்ணீர்
  • 1 ½ tbsp டீ தூள்
  • ½ டம்பளர் டீ
  • 1 கைப்பிடி புதினா
  • சின்ன துண்டு இஞ்சி
  • 4 ஐஸ் கட்டி
  • 4 tbsp தேன்
  • ½ டம்பளர் டீ
  • ½ பழம் ஆரஞ்சு சாறு
  • 1 ½ tbsp சர்க்கரை
  • 4 ஐஸ் கட்டிகள்

Equipemnts:

  • 1 டீ பாத்திரம்
  • 2 கண்ணாடி கிளாஸ்
  • 1 ஜார்
  • 1 அரிப்பு

Steps:

  1. முதலில் ஒரு பால் காய்ச்சும் பாத்திரத்தில் முன்று கப் அளவிற்கு தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்துக் கொள்ளுங்கள். பின்பு இதனுடன் ஒன்று அரை டீஸ்பூன் அளவிலான டீ தூள் சேர்த்துக் கொள்ளுங்கள்.
  2. பின் டீத்தூள் நீங்கள் வழக்கமாக வீட்டில் உபயோகப்படுத்தும் டீ தூளையே பயன்படுத்திக் கொள்ளுங்கள். பின் தண்ணீர் நன்குக கொதித்து டீயின் நிறம் மாறி வந்ததும் பாத்திரத்தை இறக்கி குளிர வைத்துக் கொள்ளுங்கள்.
  3. பின்பு ஒரு பெரிய ஜாரில் நாம் தயார் செய்த டீயை அரிப்பு வைத்து நன்கு வடிகட்டி ஊற்றி கொள்ளுங்கள்.
  4. பின்பு ஒரு மிக்ஸி ஜாரில் ஒரு கைப்பிடி புதினா இலைகளை சேர்த்து அதனுடன் பொடியாக நறுக்கிய சில இஞ்சி துண்டுகளை சேர்த்து. பின் இதனுடன் அரை கப் அளவிற்கு தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளுங்கள்
  5. பின்பு நாம் அரைத்து புதினாவை ஒரு பவுளில் வடிகட்டி ஊற்றிக் கொள்ளுங்கள். பின்பு ஒரு கண்ணாடி டம்ளரில் நான்கு ஐஸ் கட்டிகளை சேர்த்து அதனுடன் நான்கு டீஸ்பூன் அளவு சுத்தமான தேனை ஊற்றிக் கொள்ளுங்கள்.
  6. பின்பு நாம் வடிகட்டிய புதினா சாறை டம்ளரில் பாதியளவு ஊற்றி கொள்ளவும். அதன் பின்பு மேல் பாதியில் நாம் தயார் செய்த டீயை ஊற்றிக் கொள்ளுங்கள் அவ்வளவுதான் சுவையான புதினா ஐஸ் டீ தயாராகிவிட்டது.
  7. பின்பு ஒரு ஆரஞ்சு பழத்தை எடுத்து பாதியாக வெட்டி கொள்ளுங்கள். பின் வெட்டிய ஆரஞ்சு பழத்தை ஆரஞ்சு ஜூஸ் எடுக்கும் இயந்திரத்தில் வைத்து நன்றாக பிழிந்து எடுத்துக் கொள்ளுங்கள்.
  8. பின் ஒரு கண்ணாடி டம்ளரில் நான்கு ஐஸ் கட்டிகளை சேர்த்து தேவையான அளவு சர்க்கரை சேர்த்து கொள்ளுங்கள்.
  9. பின் கண்ணாடி டம்ளரில் பாத அளவு ஆரஞ்சு சாறு ஊற்றிக் கொள்ளுங்கள். பின் மேல் பாதியில் நம் தயார் செய்து வைத்திருக்கும் டீயை ஊற்றிக் கொள்ளுங்கள் அவ்வளவுதான் ஆரஞ்சு ஐஸ் டீ தயாராகிவிட்டது.