பருப்பு மாவத்தல் குழம்பு இப்படி செய்து பாருங்கள் சோறுடன் சாப்பிட ஒரு சட்டி குழம்பு கூட பத்தாது!

Summary: வத்தல் குழம்பில் பல வகைகள் உண்டு. மாங்காய் வத்தல், மிளகாய் வத்தல், தக்காளி வத்தல், சுண்டைக்காய்வத்தல், கொத்தவரங்காய் வத்தல், கத்தரிக்காய் வத்தல் இவ்வாறான வத்தல்களை சேர்த்து குழம்புசெய்யலாம். வத்தல் என்பது காய்கறிகளை உப்புக் கலந்த மோரில் ஊறவைத்து அவற்றை நான்குஅல்லது ஐந்து நாட்கள் வெயிலில் உலர்த்தி பின்னர் பயன்படுத்துவதாகும். இவ்வாறான வத்தலைபயன்படுத்தி ஒரு சுவைமிக்க பருப்பு மாவத்தல் குழம்பை எவ்வாறு சமைப்பது என்று தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

Ingredients:

  • 2 மேஜைக்கரண்டி துவரம்பருப்பு
  • 5 சிறிய வெங்காயம்
  • 1 வர மிளகாய்
  • 4 மாங்காய் வத்தல்
  • 1/4 தேக்கரண்டி சீரகம்
  • 3 பல் பூண்டு
  • 1/4 தேக்கரண்டி கடுகு
  • 2 சிட்டிகை பெருங்காயம்

Equipemnts:

  • 1 கடாய்

Steps:

  1. பருப்பு 30 நிமிடம் ஊறவைத்து ஊறியதும், பூண்டு, சீரகம் மிளகாய் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
  2. வானலியில் எண்ணெய் கறிவேப்பிலை, வெங்காயம் தக்காளி சேர்த்து வதக்கவும். கடுகு, காயவைத்து பெருங்காயம், தாளித்து மற்றும் இப்போது ஊறிய மாவத்தல் சேர்த்து கொதிக்கவிடவும்.
  3. நன்கு கொதிக்கும் சமயம் அரைத்த விழுது, உப்பு சேர்த்து கொதிக்க விடவும் பருப்பு மாவத்தல் குழம்பு தயார். இது கேழ்வரகு கூழ், கம்பங்கூழ் மாற்றும் சாதத்திற்கு ஏற்றது.