ருசியான காய் கறி கூட்டு இப்படி செய்து பாருங்க! மிச்சம் வைக்காமல் சாப்பிடுவார்கள்!

Summary: வளரும் குழந்தைகளுக்கு, அதிகப் படியான சத்து உடலுக்கு தேவைப்படுகிறது. அது மட்டுமல்லாமல் நாம் சாப்பிடும் உணவு  சத்து நிறைந்ததாக இருக்க வேண்டும். அப்படி சத்து நிறைந்த காய்கறி பல காய்கறிகள் இருக்கின்றன. இவற்றை பொரியல் செய்தும் சாப்பிடலாம். அல்லது இவற்றுடன் பருப்பு சேர்த்துக் கூட்டு செய்தும் சாப்பிடலாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடுவதாக இருந்தால் கூட்டு செய்வது தான் சிறந்த முறையாகும். இதில் காரமும் குறைவாக சேர்ப்பதால் அனைவரும் விருப்பமாக சாப்பிடுவார்கள். வாருங்கள் இப்படி ஒரு சுவையான காய் கறி கூட்டை எவ்வாறு செய்வது என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

Ingredients:

  • 1 கேரட்
  • 1 வெள்ளரிக்காய்
  • 1 கத்திரிக்காய்
  • 1 சௌசௌ
  • 1 பச்சை மிளகாய்
  • 6 பீன்ஸ்
  • 1 கப் துவரம்பருப்பு
  • 1/4 டீஸ்பூன் கடுகு
  • 1/4 டீஸ்பூன் உளுத்தம்பருப்பு
  • 1 சிட்டிகை மஞ்சள்தூள்
  • 4 டீஸ்பூன் தேங்காய் துருவல்
  • உப்பு
  • 1/4 டீஸ்பூன் சீரகம்
  • கறிவேப்பிலை

Equipemnts:

  • 1 கடாய்

Steps:

  1. கொடுத்துள்ள காய்கறிகளை கழுவி நறுக்கிக் கொள்ளவும். குக்கரில் துவரம்பருப்பு, மஞ்சள்தூள், நறுக்கிய காய்கறிகள், உப்பு சேர்த்து இரண்டு விசில் வரும் வரை வேக வைக்கவும்.
  2. மிக்ஸியில் தேங்காய் துருவல், சீரகம், பச்சை மிளகாய் போட்டு அரைக்கவும். வேக வைத்த காய்கறிக் கலவையுடன் அரைத்ததை சேர்த்து ஒருமுறை கொதிக்க விடவும்.
  3. கடுகு,உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளித்துக் கொட்ட.. வெஜிடபிள் கூட்டு தயார்!