தமிழ்நாட்டின் பிரபலமான ருசியான பள்ளிபாளையம் சிக்கன் இப்படி செய்து பாருங்க!

Summary: இந்த பள்ளிபாளையம் சிக்கன் தமிழ் நாட்டில் அசைவ உணவக மெனுவில் மிகவும் முக்கியமானது. இந்த ரெசிபி முழுவதும் கிராமத்து முறைகளில் செய்யப்படுவதாகும். இதன் முக்கிய துவமே இதில் சேர்க்கப்படும் வெங்காயம் தான். இந்த பள்ளிபாளையம் சிக்கன் தமிழக உணவகங்களில் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது.இந்த சிக்கனில் காரமும், சுவையும் பயன்படுத்தப்படும் சிவப்பு மிளகாயில் இருந்து வருகிறது.இந்த சிக்கனை வீட்டிலேயே சூளாமக ஹோட்டல் சுவையில் எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

Ingredients:

  • 1 கிலோ சிக்கன்
  • ¼ கிலோ சின்ன வெங்காயம்
  • 6 ஸ்பூன் எண்ணெய்
  • 10 வரமிளகாய்
  • 6 கறிவேப்பிலை
  • 1 கப் தேங்காய் துருவல்
  • கொத்தமல்லி
  • 50 கிராம் சிக்கன் மசாலா
  • மஞ்சள் தூள்
  • உப்பு

Equipemnts:

  • 1 கடாய்

Steps:

  1. முதலில் சிக்கனை தண்ணீரால் சுத்தம் செய்து தண்ணீரை வடிகட்டி கொள்ளவும்.
  2. ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் கடுகு போட்டு வெடித்தவுடன், கறிவேப்பிலை, வரமிளகாய், போட்டு வதக்கவும். பிறகு வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
  3. இதனுடன் சிக்கன் துடுகளை போட்டு நன்கு வதக்கவேண்டும். வதக்கும் போதே மஞ்சள் தூள், சிக்கன் மசாலா, சேர்த்து கொஞ்சம் தண்ணீர் தெளித்து வேக விடவேண்டும்.
  4. சிக்கன் வேகும் போது கிளறி விட்டுக்கொண்டே இருக்க வேண்டும். பிறகு தேவையான அளவு உப்பு சேர்த்து 20 நிமிடம் கழித்து நறுக்கிய தேங்காய் போட்டு நன்கு கிளறவும்.
  5. மீண்டும் கொஞ்சம் தண்ணீர் தெளித்து சிக்கனை வேக விடவேண்டும்.
  6. சிக்கன் நன்கு வெந்ததும் நறுக்கிய கொத்தமல்லி இழைகளை தூவி இறக்கி பரிமாறவும்.