Summary: இந்த பதிவில், நாம தக்காளி இல்லாம ஒரு சட்னி தான் பார்க்க போகிறோம். இந்த சட்னியில் கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு சேர்க்கிறதுனால இந்த சட்னிக்கு தனி சுவை கிடைக்கும். இந்த சட்னி இட்லி, தோசை, ஊத்தாப்பம் எல்லா டிபனுக்கும் தொட்டுக்கொள்ள சுவையாக இருக்கும். கண்டிப்பா இந்த சட்னியை சூடான இட்லி கூட வச்சு சாப்பிட்டீங்கன்னா எல்லாருமே ரெண்டு இட்லி கூட சேர்த்து சாப்பிடுவாங்க . நீங்களும் ட்ரை பண்ணி பாத்துட்டு உங்களுக்கு இந்த ரெசிபி எப்படி வந்துச்சுன்னு சொல்லுங்க. வாங்க இதை எப்படி செய்வது என்று பார்ப்போம்.