காரசாரமான மதுரை ஸ்டைல் மட்டன் சுக்கா செய்வது எப்படி ?

Summary: காரசாரமான மட்டன் சுக்கா மதுரை ஸ்டைலில் செய்யப் போகிறோம். இந்த மட்டன் சுக்காவை ஒருமுறை உங்கள் வீட்டில் செய்து அனைவருக்கும் பறிமாறுங்கள் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த ரெசிபியாக மாறிப் போகும். அதனால் அடுத்த முறையும் உங்களை இதே போல் செய்ய சொல்லி வற்புறுத்துவார்கள். அந்த அளவுக்கு அட்டகாசமான சுவையில் இருக்கும். ஆகையால் இன்று மதுரை ஸ்டைலில் மட்டன் சுக்கா எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

Ingredients:

  • 1 KG போன்லெஸ் மட்டன்
  • 2 tbsp உப்பு
  • 1 tbsp மஞ்சள் தூள்
  • 1 tbsp மிளகாய் தூள்
  • 2 tbsp தனியா தூள்
  • 1 ½ tbsp சீரகத் தூள்
  • ½ பழம் எலுமிச்சை சாறு
  • 2 tbsp இஞ்சி பூண்டு விழுது
  • வேக வைத்த மட்டன்
  • 2 tbsp எண்ணெய்
  • 25 சின்ன வெங்காயம்
  • 2 பச்சை மிளகாய்
  • 1 கொத்து கருவேப்பிலை
  • மிளகு தூள்

Equipemnts:

  • 1 பெரிய பவுள்
  • 1 குக்கர்
  • 1 கடாய்
  • 1 பவுள்

Steps:

  1. முதலில் போன்லெஸ் மட்டனை இரண்டு முறை தண்ணீரில் நன்கு அலசி கொண்டு ஒரு பெரிய பவுளில் எடுத்துக் கொள்ளுங்கள். அதில் உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள், சீரகத்தூள், அரை எலுமிச்சை பழச்சாறு மற்றும் கடைசியாக இரண்டு டீஸ்பூன் அளவு இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளுங்கள்.
  2. அதன் பிறகு நாம் தயார் செய்த இந்த மட்டன் மசாலா கலவையை ஒரு அரை மணி நேரங்கள் நன்கு ஊற வைத்துக் கொண்டு. அதன் பின்பு ஒரு குக்கரை எடுத்து அதில் நாம் அரை மணி நேரம் ஊற வைத்த மட்டனை சேர்த்து அதனுடன் அரை கப் தண்ணீர் சேர்த்து ஒரு ஐந்து விசில் வரும் வரை அடுப்பில் வைத்து இறக்கிக் கொள்ளுங்கள்.
  3. அதன் பின்பு கடாயை அடுப்பில் வைத்து இரண்டு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் நன்கு காய்ந்தம் இதனுடன் 25 சின்ன வெங்காயத்தை பொடி பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ளவும். பின்பு வெங்காயம் பாதி அளவு வெந்தவுடன் இரண்டு பச்சை மிளகாய் கீறி சேர்த்துக் கொள்ளவும்.
  4. பின் இதனுடன் ஒரு கொத்து கருவேப்பிலையும் சேர்த்து நன்கு கிளரி விடவும் 2 நிமிடம் நன்றாக வதக்கியதும் குக்கரில் வேகவைத்த மட்டனை தண்ணீர் உடன் கடாயில் சேர்த்து கொள்ளவும் பிறகு தண்ணீர் வற்றும் வரை சிக்கன் கிளறி விட்டு வதக்கி கொள்ளுங்கள்.
  5. கடைசியாக கடாயில் உள்ள தண்ணீர் நன்கு வற்றியதும் மட்டன் சுக்காவை இறக்கும் சமயத்தில். உங்களின் காரத்திற்கு ஏற்ப மிளகுத்தூள் தூவி கொள்ளுங்கள், அவ்வளவுதான் மதுரை ஸ்டைலில் மட்டன் சுக்கா இனிதே தயாராகிவிட்டது.