உடலுக்கு ஆரோக்கியமான, ருசியான ஓட்ஸ் அடை இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி!

Summary: மக்கள் பெரும்பாலும் காலையில் அரிசி உணவாக சாப்பிடுவார்கள். ஆனால் அரிசி ,ஓட்ஸ் அடை ரெசிபி செய்யும் முறை தெரியுமா? அரிசி மற்றும் ஓட்ஸ்ல் செய்யப்பட்ட அடை சாப்பிடுவதற்கு மிகவும் சுவையாகவும் மிருதுவாகவும் இருக்கும். அதே நேரத்தில்,ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும். இதனுடன், அதிக நார்ச்சத்து நிறைந்த இந்த அடை எளிதில் ஜீரணமாகும். எனவே அரிசி மற்றும் ஓட்ஸ் அடை தயாரிப்பதற்கான எளிதான செய்முறையை அறிந்து கொள்வோம், முயற்சி செய்வதன் மூலம் 30 நிமிடங்களில் சிறந்த காலை உணவை வழங்கலாம்.

Ingredients:

  • 1/2 கப், புழுங்கல் அரிசி
  • 1/2 கப், துவரம்பருப்பு
  • 1/2 கப், பாசிப்பருப்பு
  • 1/2 கப், ஓட்ஸ்
  • 3 வெங்காயம்
  • 4 காய்ந்த மிளகாய்
  • 1 டேபிள்ஸ்பூன் தேங்காய் துருவல்
  • சிறிதளவு கறிவேப்பிலை
  • எண்ணெய்
  • உப்பு

Equipemnts:

  • 1 தோசை கல்
  • 1 பவுள்

Steps:

  1. அரிசியை தனியாகவும், பருப்புகளை ஒன்று சேர்த்தும் 2 மணி நேரம் ஊற வைத்து… காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து சற்று கொரகொரப்பாக அரைக்கவும்.
  2. ஓட்ஸை அரை மணி நேரம் ஊற வைத்து இதனுடன் சேர்க்கவும். வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு வெங்காயம், கறிவேப்பிலையை வதக்கி மாவில் சேர்க்கவும்.
  3. தேங்காய் துருவல் சேர்த்து நன்கு கலக்கவும். தோசைக்கல்லில் எண்ணெய் விட்டு, அடைகளாக வார்த்து, இருபுறமும் சிவந்த பின் எடுக்கவும்.