இப்படி ஒரு தரம் ருசியான காடை முட்டை குழம்பு செய்து பாருங்க!இதன் சுவையே தனி!

Summary: காலை வேளையில் சுலபமாகவும் சத்துக்கள் நிறைந்ததாகவும் சமைக்க வேண்டும் என்றால் அதில் முக்கிய பங்கு வகிப்பது முட்டையும் ஒன்று. கோழி முட்டைகளை நாம் அதிகமாக உண்டு வந்தாலும், அளவில் சிறியதாக காணப்படும் காடை முட்டையில் உள்ள சத்துக்கள் ஏராளம். சிலர் முட்டையை எப்படி செய்து கொடுத்தாலும் ரசித்து ருசித்து சாப்பிடுவார்கள். ஆனால் அவிச்ச காடை முட்டை என்றால் ஒதுக்கி வைத்து விடுவார்கள். எனவே அவிச்ச காடை முட்டை விரும்பி சாப்பிடணும்னா, இப்படி குழம்பு பண்ணி பாருங்க. இந்த காடை முட்டை குழம்பு சுலபமாக எப்படி செய்யலாம்? என்பதை தான் இந்த சமையல் குறிப்பு பதிவில் இனி தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

Ingredients:

  • 2 Tbsp எண்ணெய்
  • 20 காடை முட்டை
  • 1 Tsp சீரகம்
  • 1 Tbsp இஞ்சி பூண்டு விழுது
  • 1 வெங்காயம்
  • கருவேப்பிலை
  • 1 Tsp மஞ்சள் தூள்
  • 2 தக்காளி
  • 2 பச்சை மிளகாய்
  • உப்பு
  • 1 Tsp மிளகாய் தூள்
  • 1 Tbsp மல்லி தூள்
  • 2 Tsp கரம் மசாலா
  • கொத்த மல்லி
  • தண்ணீர்

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 பெரிய பவுள்

Steps:

  1. முதலில் காடை முட்டையை ஒரு பாத்திரத்தில் போட்டு, தண்ணீர் ஊற்றி, 3-4 நிமிடம் வேக வைத்து இறக்கி, குளிர்ந்த நீரில் பலமுறை கழுவி, ஓட்டை உரித்துவிட்டு, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
  2. பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீரகம் சேர்த்து தாளித்து, பின் வெங்காயம், கறிவேப்பிலை, உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்க வேண்டும்.
  3. வெங்காயம் நன்கு வதங்கியதும் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்கு கிளறி விட்டு வதக்கவும், பின் பச்சை மிளகாய் மற்றும் மசாலா பொருட்களை சேர்த்து கிளறி விட வேண்டும்.
  4. பின் மாசலா வாசனை போன பின் தக்காளியை சேர்த்து எண்ணெய் தனியாக பிரியும் வரை வதக்கிவிட்டு, தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விட வேண்டும்.
  5. குழம்பு நன்கு கொதித்ததும், அதில் வேக வைத்துள்ள காடை முட்டையை போட்டு, மிதமான தீயில் 5 நிமிடம் கொதிக்க விட்டு, கொத்தமல்லித் தூவி இறக்கினால், காடை முட்டை குழம்பு ரெடி.