சுவையான கொள்ளு சட்னி செய்வது எப்படி ?

Summary: உடல் எடையை குறைப்பதில் மிக சிறந்த இயற்கை உணவுகளில் ஒன்றாக கொள்ளு இருக்கிறது. நமது நாட்டில் பண்டைய காலத்தில் இருந்தே உடல் எடையை குறைப்பதற்கான உணவாக கொள்ளு தானியம் இருந்து வருகிறது. நாம் ருசிக்காக பல உணவுகளை சாப்பிடும் பொழுது சிலசமயங்களில் ஒரு சிலருக்கு நெஞ்சு எரிச்சல், புளித்த ஏப்பம் போன்றவை எல்லாம் ஏற்படும் இவைகள் அஜீரணத்தின் அறிகுறிகள். இதுபோன்ற சமயங்களில் இந்த கொள்ளு சட்னியை செய்து சாப்பிட்டால் செரிமானத்திற்கு மிக நன்றாக உதவும்.

Ingredients:

  • ½ கப் கொள்ளு
  • கடலை எண்ணெய்
  • கல் உப்பு
  • கருவேப்பிலை
  • 1 tbsp கடுகு
  • 10 பல் பூண்டு
  • 4 சின்ன வெங்காயம்
  • ½ கப் தேங்காய் துருவியது

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 மிக்ஸி
  • 1 பவுள்

Steps:

  1. முதலில் கடாய் ஒன்றை அடுப்பில் வைத்து தேவையான அளவுக்கு எண்ணெய் ஊற்றிக் கொள்ளுங்கள் பிறகு என்னை சூடேறும் வரை காத்திருக்கவும். பின் கொள்ளு சட்னி செய்வதற்கு தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
  2. எண்ணெய் சூடேறியவுடன் கொள்ளு, வற்றல், வெங்காயம், பூண்டு இந்த நான்கையும் போட்டு நன்றாக வதக்கி கொள்ளுங்கள். வெங்காயம் பொன்னிறமாக வரும் வரை அங்கு கிளறிவிட்டு வதக்கிக் கொள்ளவும்.
  3. வெங்காயம் பொன்னிறமாக வந்தவுடன், காடயை இறக்கி கொள்ளுங்கள்,பின்பு சூடு இறங்கியவுடன் மிக்ஸி ஜாரில் அரைப்பதற்காக நாம் வைத்துள்ள தேங்காய் மற்றும் கடாயில் வதக்கிய பொருள்களை ஜாரில் போட்டு மையாக அரைத்துக் கொள்ளுங்கள்.
  4. பின்பு அரைத்ததை தனியாக பவுளில் எடுத்துக் கொண்டு சட்னிக்கு தேவையான அளவு தண்ணீர் ஊற்றிக் கொண்டு சிறிதளவு கல் உப்பு போட்டு நன்றாக கலக்கி கொள்ளுங்கள்.
  5. பின்பு கடாயை அடுப்பில் வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றி கொள்ளுங்கள். எண்ணெய் சூடேறியவுடன் கடுகை போட்டு கொள்ளவும், கடுகு பொரிந்த உடன் சிறிதளவு கருவேப்பிலை போட்டு தாளித்துக் கொள்ளுங்கள்.
  6. இந்த தாளிப்பை அப்படியே கொள்ளு சட்னியில் ஊற்றி கலக்கி கொள்ளுங்கள். இப்பொழுது சுவையான கொள்ளு சட்னி இனிதே தயாராகி விட்டது.