சாம்பார் சாதத்துக்கு ருசியான வெள்ளரிக்காய் பொரியல் இப்படி ஒருமுறை செஞ்சு பாருங்க!!!

Summary: காய்கறி வகைகளில் விதவிதமான காய்கறிகள் உண்டு. அதில் வெள்ளரிக்காய் ஒன்று! இதில் ஏராளமான வைட்டமின்கள் நிறைந்துள்ளன. ஆனால் இதை அடிக்கடி யாரும் சமைப்பது கிடையாது. வெள்ளரிக்காய், நீர்காய் என்பதால் உடலில் நீர் சத்து அதிகரித்து, உடல் உஷ்ணத்தை தணிக்க கூடிய ஆற்றல் இதற்கு உண்டு. அசத்தலான வெள்ளரிக்காய் பொரியல் இப்படி செஞ்சா இனி அடிக்கடி இந்த காயை வாங்க நீங்களும் ஆரம்பிச்சிடுவீங்க! வாங்க வெள்ளரிக்காய் பொரியல் ரெசிபி எப்படி எளிதாக செய்யப் போகிறோம்? என்பதை இனி பார்ப்போம்

Ingredients:

  • 300 கிராம் வெள்ளரிக்காயை
  • 1/4 கப் பயற்றம்பருப்பை
  • ஒரு தேக்கரண்டி உப்பு
  • தண்ணீர்
  • 2 மிளகாய் வற்றல்
  • 6 மிளகு
  • 1 சிட்டிகை மஞ்சள்
  • புளி
  • 1/4 தேக்கரண்டி கடுகு
  • 1/4 தேக்கரண்டி உளுத்தம் பருப்பு
  • 1/4 1/4 சீரகம்
  • 1 ஆர்க்கு கறிவேப்பிலை
  • 1/2 தேக்கரண்டி கறிமசாலா போடி
  • கொத்துமல்லி

Equipemnts:

  • 1 கடாய்

Steps:

  1. வெள்ளரிக்காயை அரிந்து, உள்ளே இருக்கும் விதைகளை போக்கிவிட்டு சிறுசிறு துண்டுகளாக அரிந்து கொள்ளவும்.
  2. பயற்றம் பருப்பை ஒன்றரை ஆழக்குத் தண்ணீரில் வேகவைத்து அதில் தயாரித்து வைத்திருக்கும் வெள்ளரிக்காய்களையும் உப்பையும் போடவும்.
  3. மிளகாய் வற்றல் இரண்டு, மிளகு ஆறு, மஞ்சள், இவற்றை நெய்யில் வறுத்து நன்றாக அரைத்து, புளியை அரை அழாக்கு தண்ணீரில் கரைத்து, வெள்ளரிக்காயில் கொட்டவும்.
  4. காய்கள் முக்கால் பதம் வெந்ததும் தாளிப்புக்கு ஒரு பாத்திரம் வைத்து, நெய் இரண்டு தேக்கரண்டி விட்டுக் காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு சீரகம் கறிவேப்பிலை, இவைகளைப் போட்டுச் சத்தம் அடங்கினதும், அதில் வெள்ளரிக்காயைக் கொட்டி, கறிமாப் பொடி அரைத் தேக்கரண்டி போட்டு, கொத்துமல்லித் தழை பத்து ஆய்ந்து சுத்தம் செய்து போட்டு, நன்றாகப் புரட்டிக் கொடுத்து இறக்கவும்.