பாய் வீட்டு ஸ்டைல் ருசியான கீ-ரைஸ் இப்படி ஒரு தரம் செஞ்சி பாருங்க! இதன் சுவையே தனி!

Summary: நெய் சோறு என்றாலே அது அளவுக்கு அதிகமாக நெய்யை ஊற்றி செய்யும் சோறு என்று நினைத்துக் கொண்டிருப்பீர்கள் ஆனால் அது அது கிடையாது.நெய்சோறு என்றால் நெய்யை அளவாக ஊற்றி சுவையாக இருக்கும்.ஒரு சிலர் அவர்கள் முஸ்லீம் நண்பர்கள் வீட்டில் அல்லது கல்யாண வீட்டில் இந்த நெய் சோற்றை சாப்பிட்டு இருப்போம் அது போல நமது வீட்டிலும் சமைத்து சாப்பிடலாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பாய் வீட்டு நெய் சோறு விரும்பி உண்பர். அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள்

Ingredients:

  • 1 cup பாஸ்மதி அரிசி
  • 2 பட்டை
  • 1 லவங்கம்
  • 2 கிராம்பு
  • 2 ஏலக்காய்
  • 1 பிரிஞ்சி இலை
  • 1 வெங்காயம்
  • 2 பச்சை மிளகாய்
  • 5 gm புதினா
  • 15 gm கொத்தமல்லி
  • 1 தக்காளி
  • 5 முந்திரிப் பருப்பு
  • ½ cup தேங்காய் பால்
  • தண்ணீர்
  • 100 gm நெய்
  • உப்பு

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 பெரிய கண் கரண்டி

Steps:

  1. பாய் வீட்டு நெய் சோறு செய்ய முதலில் கடாயில் நெய் சேர்த்து பட்டை லவங்கம் கிராம்பு பிரிஞ்சி இலை ஆகியவற்றை வறுக்க வேண்டும்.
  2. பின் நீளவாக்கில் நறுக்கிய வெங்காயத்தை சேர்க்க வேண்டும் வெங்காயம் வதங்கியதும் நீளவாக்கில் நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும்.
  3. பின்னர் புதினா கொத்தமல்லி ஆகியவற்றை சேர்த்து வதக்க வேண்டும். அதில் சிறிதாக நறுக்கிய தக்காளியை சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்க வேண்டும்.
  4. அதில் அரிசிக்கு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி பின் மேலே சொன்னவாறு தேங்காய் பாலை சேர்க்க வேண்டும்.
  5. பின் தண்ணீர் கொதித்த உடன் அரிசியை சேர்க்க வேண்டும். பின்னர் உப்பு சேர்க்க வேண்டும்.அதில் நெய்யில் வறுத்த முந்திரியை போட வேண்டும்.
  6. பின் அரிசி பாதி கொதித்த உடன் அதை தட்டு வைத்து மூடி அதன் மேல் கனமான பொருளை வைக்க வேண்டும். நெய் சோறு தம்போடும் முறையாகும்.இப்பொழுது சிறிது நேரம் கழித்து சுவையான நெய் சோறு ரெடி.