ருசியான கறிவேப்பிலை மிளகு குழம்பு இப்படி செய்து பாருங்க! ஆரோக்கிய சத்துக்கள் நிறைந்தது!

Summary: காரசாரமான ஒரு கறிவேப்பிலை மிளகு குழம்பு எப்படிவைப்பது என்று தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். அசைவ சாப்பாட்டில்நண்டு குழம்பின் சுவை, அச்சு அசலாக அப்படியே இந்த கருவேப்பிலை மிளகு குழம்பில் கிடைக்கும்.சொன்னா நீங்க நிச்சயம் நம்ப மாட்டீங்க. ஒரே ஒரு முறை இந்த குறிப்பில் இருக்கும் அளவுகளோடுஎல்லா பொருட்களையும் சேர்த்து வறுத்து அரைத்து குழம்பு வச்சு பாருங்க. திரும்பத்திரும்பசெஞ்சிக்கிட்டே இருப்பீங்க. இதை பத்திய குழம்பு என்றும் சொல்லுவார்கள். குழந்தை பெற்றதாய்மார்களுக்கும் கொடுக்கலாம். சரி, சீக்கிரமா இந்த பத்திய குழம்பு ரெசிபியை எப்படிசெய்வது என்று பார்த்து விடுவோம் வாருங்கள்.

Ingredients:

  • 2 கைப்பிடி அளவு கறிவேப்பிலை
  • 20 மிளகு
  • 2 டேபிள்ஸ்பூன் உளுத்தம்பருப்பு
  • 1 டேபிள்ஸ்பூன் துவரம்பருப்பு
  • 1 டீஸ்பூன் சீரகம்
  • 2 காய்ந்த மிளகாய்
  • புளி
  • 1 டீஸ்பூன் கடுகு
  • 4 டீஸ்பூன் எண்ணெய்
  • உப்பு

Equipemnts:

  • 1 கடாய்

Steps:

  1. வாணலியில் எண்ணெய் விட்டு மிளகு, காய்ந்த மிளகாய், உளுத்தம்பருப்பு, துவரம்பருப்பு, சீரகம் ஆகியவற்றை நன்றாக வறுத்து வைத்துக் கொள்ளவும்.
  2. கறிவேப்பிலையை எண்ணெய் விட்டு வதக்கி, வறுத்து வைத்தவற்றுடன் சேர்த்து புளி, உப்பு சேர்த்து, நீர் விட்டு நைஸாக மிக்ஸியில் அரைத்து கொள்ளவும்.
  3. வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு தாளித்து, அரைத்ததை போட்டு கொதிக்கவிட்டு ஓரங்களில் எண்ணெய் பிரிந்து வரும் போது இறக்கவும். சுவையான கறிவேப்பிலை மிளகு குழம்பு தயார்.