சிக்கனை வைத்து இப்படி கூட சமைக்கலாமா ருசியான பால‌க் ‌சி‌க்க‌ன் இப்படி செய்து பாருங்க!

Summary: இந்த பாலக் சிக்கன் ஒரு சிறந்த உணவாக நிச்சயம் இருக்கும்! இது அத்தியாவசிய ஊட்டச் சத்துக்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்தது மற்றும் காலை ,மதிய உணவிற்கு ஒரு சத்தான உணவாக இருக்கும், ஏனெனில் கீரை மற்றும் கோழி இரண்டும் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். கீரை என்பது ஆரோக்கிய குணங்கள் நிறைந்த பச்சை இலைக் காய்கறி. கீரையில் காணப்படும் தனிமங்களில் முக்கியமாக கால்சியம், சோடியம், புரதம், இரும்பு, வைட்டமின் 'ஏ' மற்றும் வைட்டமின்சி ஆகியவை நிறைந்துள்ளன. இடை சிக்கனுடன் சேர்த்து சமைத்தல் ஆரோக்கியமான உணவாக இருப்பது மட்டுமின்று சுவை அட்டகாசமாக இருக்கும். வாங்க இதை எப்படி செய்வது என்று பார்ப்போம்.

Ingredients:

  • 1/4 ‌கிலோ கோ‌ழி‌க்க‌றி
  • 1 க‌ப் பாசலை‌க் ‌கீரை
  • 3 வெ‌ங்காய‌ம்
  • 10 ப‌ல் பூ‌ண்டு
  • 7 ப‌ச்சை ‌மிளகா‌ய்
  • கொ‌த்தும‌ல்‌லி
  • ப‌ட்டை
  • இலை
  • ‌கிரா‌ம்பு
  • 1/2 க‌ப் த‌யி‌ர்
  • எ‌ண்ணெ‌ய்
  • உ‌ப்பு

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 மிக்ஸி

Steps:

  1. வெ‌ங்காய‌ம், பூ‌ண்டு, ப‌ச்சை ‌மிளகாயை பொடியாக நறு‌க்கவு‌ம். பசலை‌க் ‌கீரையை த‌ண்‌ணீ‌ர்‌ ‌வி‌ட்டு வே‌க வை‌க்கவு‌ம்.வாண‌லி‌யி‌ல் எ‌ண்ணெ‌ய் ஊ‌ற்‌றி ‌கிரா‌ம்பு, ப‌ட்டை, இலைபோட்டு தா‌ளி‌க்கவு‌ம்.
  2. ‌பிறகு வெ‌ங்காய‌ம், ப‌ச்சை ‌மிளகா‌ய், பூ‌ண்டு, கொ‌த்தும‌ல்‌லி சே‌ர்‌த்து வத‌க்கவு‌ம். இ‌தி‌ல் பசலை‌க் ‌கீரையை‌ப் போ‌ட்டுவத‌க்கவு‌ம்.
  3. ந‌ன்கு வத‌ங்‌கியது‌ம் ஆற‌வி‌ட்டு ‌மி‌க்‌சி‌யி‌ல் போ‌ட்டு ‌‌விழுதாக அரை‌த்து‌க் கொ‌ள்ளவு‌ம்.வாண‌லி‌யி‌ல் ‌மீ‌ண்டு‌ம் எ‌ண்ணெ‌ய் ‌வி‌ட்டு, அரை‌த்த ‌விழுதை‌க் கொ‌ட்டவு‌ம். அதனுட‌ன் த‌யிரை சே‌ர்‌த்து‌க்‌கிளறவு‌ம்.
  4. எ‌ண்ணெ‌ய் த‌னியாக‌ பி‌ரி‌ந்து வரு‌ம் போது கோ‌ழி‌க்க‌றி‌த் து‌ண்டையு‌ம், உ‌ப்பையும் சே‌ர்‌த்து‌க்‌ கிள‌றி ந‌ன்கு வேக ‌விடவு‌ம். கோ‌ழி‌க்க‌றி வெ‌ந்தது‌ம் இற‌க்கவு‌ம்.