வீடே மணமணக்க காரசாரமான ருசியில் ரவா கிச்சடி இப்படி ஒரு முறை செய்து பாருங்கள்!

Summary: வீட்டில் உள்ள அனைவருக்கும் பிடித்த உணவு செய்தால் விருப்பமாக சாப்பிடுவார்கள். இதுவே அவர்களுக்கு விருப்பம் இல்லாத உணவை நாம் கொடுப்பதாக இருந்தால் சாப்பிட போராட வேண்டியிருக்கும். ஆகவே வித்தியாசமான உணவை தான் நான் செய்யது கொடுக்க விரும்புகிறோம்.  உப்புமா என்றாலே தலைதெறிக்க அனைவரும் ஓடிவிடுவார்கள். அப்படிப்பட்டவர்களும் பிடித்து சாப்பிடும் வகையில் இருக்கும் இந்த ஸ்பைஸி ரவா கிச்சடி.காரம் சிறிது தூக்கலாகவும், காய்கறிகள் சேர்த்தும் செய்யக்கூடிய இந்த ஸ்பைஸி ரவா கிச்சடியை ஒரு முறை செய்து கொடுத்துப் பாருங்கள். இதன் ருசிக்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை  எனக்குவேண்டும் என்று கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள். வாருங்கள் இந்த ரவா கிச்சடியை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

Ingredients:

  • 1 கப் வறுத்த ரவை
  • 1 பெரிய வெங்காயம்
  • 2 பச்சை மிளகாய்
  • 1 தலா ஏலக்காய்
  • 1 டீஸ்பூன் இஞ்சி – பூண்டு விழுது
  • புதினா
  • கொத்தமல்லி
  • 1/2 கப் பச்சைப் பட்டாணி
  • 1 1/2 கப் தேங்காய்ப் பால்
  • 2 டீஸ்பூன் எலுமிச்சைச் சாறு
  • சிறு துண்டு பட்டை
  • 2 கிராம்பு
  • 1 டீஸ்பூன் நெய்
  • 1 டீஸ்பூன் எண்ணெய்
  • உப்பு

Equipemnts:

  • 1 கடாய்

Steps:

  1. பெரிய வெங்காயத்தை நீளநீளமாக மெல்லிதாக நறுக்கவும். புதினா, கொத்தமல்லியை பொடியாக நறுக்கவும்.
  2. அடி கனமான வாணலியில் நெய் மற்றும் எண்ணெய் விட்டு. காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய் தாளித்து, வெங்காயம், கீறிய பச்சை மிளகாய், பச்சைப் பட்டாணி சேர்த்து வதக்கவும்.
  3. வெங்காயம் சிறிது வதங்கியதும் இஞ்சி – பூண்டு விழுது, புதினா, கொத்தமல்லி, உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு தேங்காய்ப் பால், ஒரு கப் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும். கொதி வந்ததும் வறுத்த ரவை, எலுமிச்சைச் சாறு சேர்த்து நன்கு கிளறி, அடுப்பை 'சிம்'மில் வைத்து 10 நிமிடம் கழித்து இறக்கிப் பறிமாறவும்.