காரசாரமான சப்பாத்தி நூடுல்ஸ் செய்வது எப்படி ?

Summary: உங்களுக்கு நூடுல்ஸ் சாப்பிட வேண்டும் என்று தோன்றினால். நீங்கள் அதை ஹோட்டலில் சென்றோ அல்லது ஆர்டர் செய்து சாப்பிடுவதுக்கு பதில் நீங்களே வீட்டில் நூடுல்ஸ்க்கு பதிலாக இந்த சப்பாத்தி நூடுல்ஸ் தயார் செய்த சாப்பிடலாம். இது உடலுக்கும் ஆரோக்கியமானதாக இருக்கும் உங்கள் உடலுக்கு தீங்கும் விளைவிக்காது. இந்த சப்பாத்தி நூடுல்ஸ் எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

Ingredients:

  • 4 tbsp எண்ணெய்
  • 1 பெரிய வெங்காயம்
  • ½ கப் முட்டை கோஸ்
  • ½ tbsp குடை மிளகாய்
  • 1 கப் துருவிய கேரட்
  • 4 பூண்டு
  • 1 tbsp இஞ்சி பூண்டு விழுது
  • 1 tbsp சோயா சாஸ்
  • 1 tbsp மிளகு தூள்
  • 1 tbsp மிளகாய் தூள்
  • உப்பு

Equipemnts:

  • 1 கடாய்
  • 2 பவுள்

Steps:

  1. முதலில் சப்பாத்தி நூடுல்ஸ் செய்வதற்கு நம் எடுத்து வைத்திருக்கும் சப்பாத்தியை நூடுல்ஸ் போன்று வெட்டிக் கொள்ளுங்கள், அதன் பின்பு கடாயை அடுப்பில் வைத்து அதில் இரண்டு டீஸ்பூன் அளவு எண்ணெய் ஊற்றிக் கொள்ளுங்கள்.
  2. அதன் பின்பு பொடியாக நறுக்கி வைத்திருக்கும் வெங்காயத்தையும் மற்றும் பூண்டு பற்களை சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும். வெங்காயம் பாதி அளவு வெந்தவுடன் அதனுடன் நாம் மெல்லிதாக வெட்டி வைத்திருக்கும் முட்டைகோஸ் மற்றும் குடைமிளகாவையும் கடாயில் சேர்த்துக் வதக்கி கொள்ளவும்.
  3. அதன் பின்பு இந்த பொருட்களும் பாதி அளவு நன்றாக வெந்ததும் ஒரு டீஸ்பூன் அளவு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு கிளறிவிட்டு வதக்கி கொள்ளுங்கள். இஞ்சி பூண்டு நன்றாக வதங்கியதும் நாம் துருவிய வைத்திருக்கும் கேரட்டையும் இதனுடன் சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளுங்கள்.
  4. அனைத்து பொருட்களும் நன்றாக வதங்கியதும் ஒரு டீஸ்பூன் அளவு சோயா சாஸ், தேவையான அளவு உப்பு, ஒரு டீஸ்பூன் மிளகுத்தூள் மற்றும் ஒரு டீஸ்பூன் மிளகாய்த்தூள் சேர்த்து நன்கு கிளறி விட்டு ஒரு நிமிடம் நன்றாக வதக்கி கொள்ளுங்கள்.
  5. நாம் நூடுல்ஸ் போல் வெட்டி வைத்திருக்கும் சப்பாத்தியையும் இதனுடன் சேர்த்து நன்கு கிளறி விட்டுக் கொள்ளுங்கள். இதனுடன் நீங்கள் முட்டை, சிக்கன் போன்றவற்றை சேர்க்க விரும்பினால் சேர்த்துக் கொள்ளுங்கள். அவ்வளவுதான் காரசாரமான சப்பாத்தி நூடுல்ஸ் இனிதே தயாராகி விட்டது.