ருசியான செட்டிநாடு காளான் குழம்பு இப்படி ஒரு முறை செய்து பாருங்க!

Summary: நாம் வழக்கமாக சாப்பிடாத உணவு பொருள்களில் ஒன்று தான் காளான். காளான் குழந்தைகளுக்கு வலிமையை தரும் ஒரு உணவு ஆகும். காளான் இரும்பு மற்றும் செம்பு சத்துக்களையும் அதிகம் கொண்டது. காளான் குழம்பு மிகவும் ருசியான சமைப்பதற்கு எளிமையான ஒன்று. எளிதாக கிடைக்கும் ஒரு பொருளாக காளான் உள்ளதால்  இதனை அடிக்கடி சமைத்து ருசிக்க முடியும். சப்பாத்தி, தோசை மற்றும் சாதத்துடன் கலந்து சாப்பிடலாம்.. வாருங்கள் இதனை எப்படி சமைக்க வேண்டும் என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

Ingredients:

  • 1 வெங்காயம்
  • 1 பாக்கெட் காளான்
  • 1 தக்காளி
  • 1 டீஸ்பூன் கடுகு
  • 1 டீஸ்பூன் சீரகம்
  • உப்பு
  • 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
  • கறிவேப்பிலை
  • 3 வரமிளகாய்
  • 1 டேபிள் ஸ்பூன் உளுத்தம் பருப்பு
  • 1 டேபிள் ஸ்பூன் கடலைப் பருப்பு
  • 1 டீஸ்பூன் சீரகம்
  • 1 டீஸ்பூன் மல்லி
  • 1 டீஸ்பூன் மிளகு

Equipemnts:

  • 1 கடாய்

Steps:

  1. முதலில் மசாலாவிற்கு கொடுத்துள்ள பொருட்களை வாணலியில் போட்டு பொன்னிறமாக வறுத்து இறக்கி குளிர வைத்து, பொடி செய்து கொள்ள வேண்டும்.
  2. பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, சீரகம் சேர்த்து தாளித்து, வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்க வேண்டும்.
  3. பின்னர் அதில் கறிவேப்பிலை சேர்த்து வதக்கி, பின் காளானை சேர்த்து காளானை நன்கு வேக வைக்க வேண்டும்.
  4. அடுத்து அதில் தக்காளி, தேவையான அளவு உப்பு, 1-2 டேபிள் ஸ்பூன்  அரைத்தமசாலா பொடி சேர்த்து நன்கு பிரட்டி, மூடி வைத்து 2-3 நிமிடம் மிதமான தீயில் வேக வைத்து இறக்கினால், செட்டிநாடு காளான் ரெடி!!!