இனி கோவக்காய் வைத்து ருசியான பொரியல் இப்படி ஒரு தரம் செய்து பாருங்கள்!

Summary: மதிய சாதத்துடன் என்ன பொரியல் செய்து சாப்பிடலாம் என்று யோசிக்கிறீர்களா அப்போ உங்களுக்கான பதிவு தான் இது. கோவக்காய் பொரியல் செய்து சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டு பாருங்க அவ்வளவு சுவையாக இருக்கும். எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க. அதுமட்டும் அல்லாமல் நிறைய சத்துக்களும் நிறைந்துள்ளது இந்த கோவைக்காயில். அதனால் உடலுக்கும் ஆரோக்கியானது. கோவக்காய் பொரியல் எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

Ingredients:

  • 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
  • 1 டீஸ்பூன் கடுகு
  • 2 கப் கோவக்காய்
  • 1 ஸ்பூன் கடலை பருப்பு
  • 8 பல் பூண்டு
  • 3 பெரிய வெங்காயம்
  • கருவேப்பிலை
  • 1 ஸ்பூன் சீரகம்
  • உப்பு
  • மஞ்சள் தூள்
  • குழம்பு மிளகாய் தூள்
  • 2 டேபிள் ஸ்பூன் தேங்காய் துருவல்

Equipemnts:

  • 1 கடாய்

Steps:

  1. முதலில் கோவைக்காயை கழுவி சுத்தம் செய்து நறுக்கிக்கொள்ளவும்.
  2. அடுத்து ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, சீரகம் சேர்த்து பொரிந்ததும் கடலை பருப்பு சேர்த்து சிவந்ததும் நறுக்கிய பூண்டு சேர்த்து வதக்கவும்.
  3. பூண்டு வதங்கியதும் நறுக்கிய வெங்காயம், மற்றும் கருவேப்பிலை சேர்த்து வெங்காயம் கண்ணாடி பதம் வரை வதக்கவும்.
  4. வெங்காயம் வதங்கியதும் நறுக்கி வைத்துள்ள கோவைக்காய் சேர்த்து தேவையான அளவு உப்பு, குழம்பு மிளகாய் தூள், மஞ்சள் தூள், சேர்த்து கலந்து கொஞ்சம் தண்ணீர் விட்டு மூடி போட்டு நன்கு வேக வைக்கவும்.
  5. கோவைக்காய் வெந்து தண்ணீர் சுண்டியதும் அதன் மேல் தேங்காய் துருவல் தூவி இறக்கவும்.