உருளைக்கிழங்கை வைத்து இப்படி கூட செய்யலா என யோசிக்க வைக்கும் ருசியான சீஸ் பால்ஸ்!

Summary: பொதுவாகவே உருளைக்கிழங்கை கொண்டு செய்யப்படும் அனைத்து உணவுகளையுமே சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பெரும்பாலும் அனைவருக்கும் பிடித்தமான ஒரு உணவாக தான் இருக்கும். அந்த வகையில் நாம் இன்று இங்கு காண இருப்பது பிசைந்த உருளைக்கிழங்கு பந்துகள். இந்த மொறு மொறுப்பான பிசைந்த உருளைக்கிழங்கு பந்துகளை கெட்சப்வுடன் சேர்த்து உண்டால் மிகவும் அட்டகாசமாக இருக்கும்.இதன் ஸ்பெஷல் என்னவென்றால் இதை நாம் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே வெகு சுலபமாக எந்த ஒரு சிரமமுமின்றி குறைந்த நேரத்திலேயே இதை செய்து சுவைக்க முடியும். மேலும் சமைக்க தெரியாதவர்கள் கூட இதை வெகு எளிதாக செய்ய முடியும்.

Ingredients:

  • 50 கிராம் நறுக்கிய சீஸ்
  • 5 வேகவைத்த உருளைக்கிழங்கு
  • 2 மேஜைக்கரண்டி துருவிய சீஸ்
  • 3 தேக்கரண்டி மைதா மாவு
  • 2 மேஜைக்கரண்டி பிரட்
  • 1/2 மேஜைக்கரண்டி மிளகாய் தூள்
  • சிறிதளவு கொத்தமல்லி இலை
  • தேவையான உப்பு
  • எண்ணெய்
  • தண்ணீர்

Equipemnts:

  • 1 கரண்டி
  • 1 கடாய்
  • 1 பெரிய பவுள்

Steps:

  1. சீஸ்சை துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். உருளைக்கிழங்கை வேக வைத்து தோலுரித்து வைத்துக் கொள்ளவும்.
  2. பிறகு உருளைக்கிழங்கை மசித்து அதனுடன் கொத்தமல்லித்தழை, மிளகாய்த்தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து ஒன்றாக கலந்து கொள்ளவும்.
  3. கலந்த கலவையை தட்டையாக தட்டி அதனுள் சீஸ் கட்டியை வைத்து உருண்டையாக உருட்டவும்.
  4. பிறகு பாத்திரத்தில் மைதா மாவு சேர்த்து தண்ணீர் விட்டு கரைத்து வைத்துக் கொள்ளவும். உருட்டிய உருண்டையை அதில் போட்டு எடுத்துக் கொள்ளவும்.
  5. தயாராக வைத்துள்ள பிரெட் துகள்களில் மைதா மாவில் முக்கி எடுத்து உருண்டையை சேர்ந்து நன்றாக உருட்டவும்.
  6. அனைத்து மாவையும் இதே போல் தயார் செய்து வைத்துக் கொள்ளவும்.
  7. பிறகு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் ஒவ்வொரு உருண்டைகளாக சேர்த்து பொன்னிறமாகும் வரை பொரித்து எடுக்கவும். தீயின் அளவை மிதமாக வைத்துக்கொள்ளவும்.
  8. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் உருளைக்கிழங்கு சீஸ் பால்ஸ் சுட சுட தயார்.
  9. தக்காளி மற்றும் மிளகாய் சாஸுடன் பரிமாற சுவையாக இருக்கும்