இவ்வளவு நாட்கள் இது தெரியாம போச்சே மாலை ஸ்நாக்ஸாக மீன் வடை இப்படி செய்து பாருங்க!

Summary: மீனை குழம்பு, வறுவல் என விதவிதமாக சமைத்திருப்பீர்கள்.ஆனால் மீனில் வடை செய்திருக்கிறீர்களா?  மீன் வடை ஹோட்டல்களில் கூட பெரும்பாலும் கிடைக்காது..மீன் விரும்பி ருசிப்பவர்கள் நிச்சயம் மீன் வடை சாப்பிட்டு பாருங்கள். மீன் வடை சாப்பிடுவதற்கு மசாலா கலந்து மிகவும் ருசியாக இருக்கும். மீனை குழம்பு, வறுவல் என விதவிதமாக சமைத்திருப்பீர்கள்.ஆனால் மீனில் வடை செய்திருக்கிறீர்களா? அதனை நம் வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவில் காண்போம் வாருங்கள்.

Ingredients:

  • 500 கிராம் மீன்
  • 1 முட்டை
  • 100 கிராம் உருளைக்கிழங்கு
  • 1 தேக்கரண்டி மிளகாய்த்தூள்
  • 3 பச்சைமிளகாய்
  • உப்பு
  • எண்ணெய்

Equipemnts:

  • 1 பவுள்

Steps:

  1. மீனைச் சிறிது நீர்விட்டு வேகவைத்து முள், தோல் நீக்கி நன்கு பிசையவும். உருளைக்கிழங்கை வேகவைத்து, தோல் உரித்து நன்கு மசிக்கவும்.
  2. வெங்காயம்,பச்சை மிளகாயைப் பொடியாக வெட்டவும்.  மீன்,உருளைக்கிழங்கு, மிளகாய்த் தூள், வெட்டிய வெங்காயம், பச்சை மிளகாய், உப்பு, முட்டை எல்லாம் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.
  3. எண்ணெயைக் காய வைத்து சிறு சிறு வடைகளாகத் தட்டிப் போட்டு இருபுறமும், சிவந்ததும் எடுக்கவும்.  ருசியான மீன் வடை தயார். உருளைக்கிழங்கிற்குப் பதிலாக இரண்டு தேக்கரண்டி அரிசி மாவு கலந்தும் மீன் வடை செய்யலாம்.