அஹா என்ன ருசி மட்டன் குழம்புனா இப்படி தான் இருக்கனும்! இதன் ருசியே தனி ருசி தான்!

Summary: அசைவம் என்றாலே போதும் எல்லோருக்கும் நாவில் எச்சில் ஊற ஆரமித்து விடும். அசைவத்தில் எல்லோருக்கும் எல்லாம் பிடிக்கணும் என்று அவசியம் இல்லை, ஒரு சிலருக்கு, கோழி, இறால், நண்டு பிடிக்கலாம், ஒரு சிலர் ஆட்டுக்கறி குழம்பு விரும்பி சாப்பிடுவாங்க. அப்படி விரும்பி சாப்பிடக்கூடியவர்களுக்கு உதவும் வகையில் இந்த ரெசிபி எப்படி செய்வது என்று தான் இன்று நாம் பார்க்க போகிறோம்.இந்த மட்டன் குழம்பு கடைகளில் வைக்கப்படும் அதே சுவையில் இருக்கும். நாம் வீட்டிலேயே அதே சுவையில் சுலபமாக செய்து விடலாம்.இந்த மட்டன் குழம்பு எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை படித்து பார்த்து நீங்களும் செய்து அசத்துங்கள். எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க.இந்த மட்டன் குழம்புடன் சாதம், இட்லி, தோசை, சப்பாத்தி போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட்டால் அற்புதமாக இருக்கும் நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

Ingredients:

  • 600 கிராம் மட்டன்
  • 1½ டேபிள் ஸ்பூன் எண்ணெய்
  • 1 பட்டை
  • 3 கிராம்பு
  • 1 நச்சத்திர சோம்பு
  • கல்பாசி
  • ½ டீஸ்பூன் சோம்பு
  • 1 பிரிஞ்சி இலை
  • ½ கப் சின்ன வெங்காயம்
  • கறிவேப்பிலை
  • 10 சின்ன வெங்காயம் முழுதாக
  • 1 டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 1 டீஸ்பூன் கேஸ்மீரி மிளகாய் தூள்
  • ½ கப் தக்காளி
  • 3 டேபிள் ஸ்பூன் குழம்பு மிளகாய் தூள்
  • உப்பு
  • ½ டீஸ்பூன் கசகசா
  • 5 முந்திரி
  • 1 உருளை கிழங்கு
  • கொத்தமல்லி இலை

Equipemnts:

  • 1 குக்கர்

Steps:

  1. முதலில் மட்டன் துண்டுகளை கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்.
  2. பிறகு கசகசாவை சுடுதண்ணீரில் போட்டு அதனை மிக்சியில் சேர்த்து அத்துடன் முந்திரி பருப்பையும் சேர்த்து விழுதாக அரைத்துக்கொள்ளவும்.
  3. பிறகு ஒரு குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்பு, கல்பாசி, நச்சத்திர சோம்பு, சோம்பு, சேர்த்து மிதமான தீயில் நன்கு பொரிந்து வர வேண்டும்.
  4. பிறகு நறுக்கிய வெங்காயம், கருவேப்பிலை, முழு சின்ன வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
  5. வெங்காயம் பொன்னிறமானதும் இஞ்சி பூண்டு விழுது, மிதமான தீயில் பச்சை வாசனை போக வதக்கவும்.
  6. பிறகு அதில் காஸ்மீரி மிளகாய் தூள், அடிபிடிக்காமல் வதக்கவும். அடுத்து தக்காளி விழுதை சேர்த்து நன்கு வதக்கவும்.
  7. தக்காளி வதங்கியதும் குழம்பு மிளகாய் தூள் சேர்த்து மிதமான தீயில் பச்சை வாசனை போக வதக்கவும்.
  8. அடுத்து சுத்தம் செய்த மட்டன் துண்டுகளை போட்டு கலந்து விடவும் மிதமான தீயில் சிறிது நேரம் தண்ணீர் சேர்க்காமல் வதக்கவும்.
  9. பிறகு அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து மட்டன் முழுகும் அளவிற்கு மட்டும் தண்ணீர் சேர்த்து 3 நிமிடம் கொதிக்கவிடவும். அதில் கசகசா, முந்திரி பருப்பு விழுது சேர்த்து கொதிக்கவிடவும்.
  10. கொதித்ததும் வெட்டிய உருளைக்கிழங்கு சேர்த்து குக்கரை மூடி மட்டன் வேகும் அளவிற்கு விசில் விட்டு, கொத்தமல்லி இலைகளை தூவி பரிமாறவும்.
  11. இப்பொழுது சுவையான மட்டன் குழம்பு தயார்.