ருசியான கிராமத்து ஸ்டைல் முட்டை கிரேவி மதிய உணவுக்கு இப்படி செய்து பாருங்க!

Summary: முட்டை என்றாலே யாருக்கு தான் பிடிக்காது, அதுவும் முட்டையில் கிரேவி செய்து சுட சுட சாதத்தில் போட்டு சாப்பிட்டால் அதன் சுவைக்கு ஈடே கிடையாது. இந்த முட்டை கிரேவியானது அட்டகாசமான சுவையில் இருக்கும். இதை வீட்டில் உள்ளவர்களுக்கு செய்து கொடுத்தால் சாப்பாடு அதிகம் சாப்பிடாதவர்கள் கூட மீண்டும் கேட்டு சாப்பிடுவாங்க.அதுமட்டும் அல்லாமல் வேக வைத்து முட்டை சாப்பிட்டால் உடலுக்கு பல நன்மைகள் தரும் அந்தவகையில் வேக வாய்த்த முட்டையை வைத்து இந்த மாரி கிரேவி செய்து சாப்பிடுங்க. சப்பாத்தி, சாப்பாடு போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட்டால் சூப்பராக இருக்கும்.

Ingredients:

  • 2 டீஸ்பூன் மிளகாய் தூள்
  • 3 வெங்காயம்
  • 5-6 முட்டை
  • 1 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • புளிக்கரைசல்
  • எண்ணெய்

Equipemnts:

  • 1 கடாய்

Steps:

  1. முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் பட்டை, நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
  2. பொன்னிறமாக வதங்கியதும் அதில் புளிச்சாறு, மிளகாய் தூள், மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு, சேர்த்து கிளறி 5-7 நிமிடம் குறைவான தீயில் கொதிக்க விட வேண்டும்.
  3. பிறகு கிரேவி பதத்திற்கு வந்ததும் வேக வைத்த முட்டைகளை மேலே லேசாக இரு புறம் கீறி கிரேவியில் சேர்க்கவும். நன்கு கிளறி விடவும் 2 நிமிடம் களைத்து இறக்கி கொத்தமல்லி இழைகளை தூவி பரிமாறவும்.