சட்னி இப்படி தான் இருக்கனும் சொல்ற அளவுக்கு ருசியான குன்டூர் கார சட்னி இப்படி செய்து பாருங்க!

Summary: எப்பொழுதும் இட்லி, தோசைக்கு தக்காளி சட்னி, தேங்காய் சட்னி என்று இந்த இரண்டு சட்னிகளை மட்டும் திரும்ப, திரும்ப சாப்பிட்டு போர் அடித்துவிட்டது என்றால் அப்பொழுது உங்களுக்கான பதிவு தான் இது. அப்படியானால் குண்டூர் கார சட்னி உங்களுக்கான சுவையாகவும், சுலபமாகவும் இருக்க கூடிய சட்னி இனி இப்படி செஞ்சி சாப்பிட்டு பாருங்க அப்றம் மீண்டும் மீண்டும் இந்த சட்னி தான் சாப்பிட தோன்றும்.

Ingredients:

  • 15 சின்ன வெங்காயம்
  • 10 பல் பூண்டு
  • 6 வர மிளகாய்
  • புளி
  • உப்பு
  • 2 டீஸ்பூன் நல்லெண்ணெய்
  • 1 டீஸ்பூன் கடுகு
  • கருவேப்பிலை
  • வெல்லம்

Equipemnts:

  • கடாய்

Steps:

  1. முதலில் பூண்டு தனியாக இடித்து வைத்துக்கொள்ளவும்.
  2. அடுத்து சின்ன வெங்காயத்தையும் இடித்து தனியாக எடுத்துவைத்துக்கொள்ளவும்.
  3. அடுத்து ஒரு மிக்சி ஜாரில் 1 மணிநேரம் விதைகளை நீக்கி ஊறவைத்த வரமிளகாய், புளி, தேவையான அளவு உப்பு சேர்த்து கொஞ்சம் தண்ணீர் ஊற்றி அரைத்துக்கொள்ளவும்.
  4. அடுத்து ஒரு கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு சேர்த்து பொரிந்ததும் கருவேப்பிலை, இடித்து வைத்த பூண்டு சேர்த்து நன்கு வதக்கவும்.
  5. பிறகு அதில் இடித்து வைத்துள்ள சின்ன வெங்காயத்தையும் சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்கவும்.
  6. வெங்காயம் வதங்கியதும் அரைத்துவைத்துல மிளகாய், புளி பேஸ்டை இதில் ஊற்றி அத்துடன் வெல்லம் சேர்த்து கொஞ்சமாக தண்ணீர் விட்டு கொதித்ததும் அடுப்பை நிறுத்தவும்.