இனி இதே நீங்கள் வீட்டிலே செய்யாலாம் ருசியான இறால் தந்தூரி இப்படி செய்து பாருங்க!

Summary: ஹோட்டலில் சாப்பிட வெளியில் செல்ல வேண்டிய அவசியமில்லை, வீட்டிலேயே ஸ்பெஷல் உணவுகளையும் செய்யலாம்.அப்படிப்பட்ட ஒரு சுவையான உணவின் செய்முறையை இன்று நாங்கள் உங்களுக்கு சொல்கிறோம்,அசைவம் சாப்பிடுபவர்களின் மிகவும் பிடித்த உணவு என்றால் இறால் தான். இறாலில் செய்யப்படும் ஒவ்வொரு உணவும் அருமையாக இருக்கும். அப்படிப்பட்ட ஒரு உணவுதான் இறால் தந்தூரி . அதை உருவாக்க நீண்ட நேரம் எடுக்கும், ஆனால் சுவைத்தால், அனைத்து கடினமும் பறந்து போய்விடும்.. ஞாயிறு அன்று சௌகரியமாக செய்து குடும்ப உறுப்பினர்களுடன் சேர்ந்து சாப்பிடலாம். வாங்க இதை எப்படி செய்வது என்று பார்ப்போம்.

Ingredients:

  • 500 கிராம் பெரிய இறால்
  • 3 கரண்டி இஞ்சி பூண்டு விழுது
  • 1 கரண்டி மிளகாய்தூள்
  • 2 கரண்டி தந்தூரி பேஸ்ட்
  • 2 கரண்டி எலுமிச்சைச்சாறு
  • 5 கிராம் வெண்ணெய்
  • உப்பு
  • 1 கரண்டி தயிர்

Equipemnts:

  • 1 தோசை கல் / அவன்
  • 1 பவுள்

Steps:

  1. முதலில் இறாலை சுத்தம் செய்துக் கொள்ளவும் அதில் வெண்ணெய் தவிர எல்லாப் பொருள்களையும் சேர்த்து பிரட்டி முக்கால் மணி நேரம் ஊற விடவும்
  2. பின் அவனில் வைக்கும் தட்டில் வெண்ணெயை தடவி அதில் இறாலை பரப்பி வைக்கவும் பின்280 F சூடாகிய அவனில் வைத்து இடையிடையில் திருப்பி விட்டு நன்கு வெந்தவுடன் எடுக்கவும்.
  3. அவன் இல்லாமல் நாண்ஸ்டிக் தவாவிலும் லேசாக எண்ணெய் தடவி இதை போல் செய்யலாம் …