காரசாரமான கேரளா ஸ்டைல் சிக்கன் வறுவல் இப்படி செய்து பாருங்க!

Summary: இந்த கேரளா சிக்கன் வறுவல் சிறியவர்கள் இந்த பெரியவர்கள் வரை அனைவர்க்கும் மிகவும் பிடித்தமானதாக இருக்கும். அதை சற்று காரம் தூக்கலாக செய்து சுவைத்தால் எப்படி இருக்கும்? அது தான் கேரளா ஸ்டைல் சிக்கன் வறுவல், அதைத்தான் நாம் இங்கு செய்து பார்க்க இருக்கிறோம். நம்ம ஊர் சிக்கன் வறுவலுக்கும், ஆந்திரா ஸ்டைல் சிக்கன் வறுவலுக்கும் மற்றும் வட ஆந்திரா ஸ்டைல் சிக்கன் வறுவல் இரட்டிப்பு மடங்கு காரமாக இருக்கும். இந்த சிக்கன் வறுவலை எப்படி சமைக்கலாம் என்பதை கீழே கொடுத்துளோம் இந்த வாரம் கடைசியில் இந்த கேரளா ஸ்டைல் சிக்கன் வறுவல் செய்து பாருங்கள்.

Ingredients:

  • 1/4 KG சிக்கன்
  • 1 tbsp இஞ்சி பூண்டு விழுது
  • 1/2 tsp உப்பு
  • 1/4 tsp மஞ்சள் தூள்
  • 2 tbsp தேங்காய் எண்ணெய்
  • 1 tsp கடுகு
  • 1 tsp சீரகம்
  • 1 கொத்து கருவேப்பிலை
  • 25 சின்ன வெங்காயம்
  • 2 tbsp தனியா தூள்
  • ½ tsp கரம் மசாலா
  • ½ tsp சீரகத்தூள்
  • அரைத்த தேங்காய்
  • தண்ணீர்
  • 1 tsp தேங்காய் எண்ணெய்
  • 10 வர மிளகாய்
  • 1 கப் துருவிய தேங்காய்

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 பெரிய பவுள்

Steps:

  1. முதலில் நாம் வைத்திருக்கும் சிக்கனை இரண்டு மூன்று முறை தண்ணீர் வந்து நன்கு அலசி கொள்ளுங்கள். பின் தண்ணீரில் அலசிய சிக்கனை ஒரு பெரிய பவுளில் சேர்த்து கொள்ளுங்கள்.
  2. பின் சிக்கனுடன் ஒரு டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது, ஒரு டேபிள் ஸ்பூன் உப்பு, கால் டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து கைகளால் நன்கு கலந்து விட்டு ஒரு 30 நிமிடங்கள் நன்கு ஊறவிடவும்.
  3. அதன் பின் கடாயை அடுப்பில் வைத்து தீயை மிதயாக ஏரிய விட்டு ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி அதில் வர மிளகாய் மற்றும் துருவிய தேங்காய் சேர்த்து வதக்கி பின் நன்றாக குளிர வைக்கவும்
  4. பின் குளிர வைத்த பொருட்களை மிக்ஸி சேர்த்து அதனுடன் சிறிது தண்ணீர் உற்றி பேஸ்ட்டாக அரைக்கவும். பின் மீண்டும் கடாயை அடுப்பில் வைத்து அதில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்ததும் அதில் கடுகு, சீரகம், மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து கொள்ளவும்.
  5. பின் இதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். பின் வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வரும் வரை நன்கு வதக்கி விடுங்கள்.
  6. பின்பு இதனுடன் நாம் ஊறவைத்த சிக்கனை சேர்த்து நன்கு கிளறி விடவும் பின் கடாயை மூடி வைத்து ஒரு மூன்று நிமிடங்கள் நன்கு வேக விடவும், பின் இதனுடன் தனியா தூள், கரம் மசாலா மற்றும் சீரகத்தூள் சேர்த்து நன்கு வதக்கி விடுங்கள்.
  7. பின் மசாலா பொருட்கள் நன்கு வதங்கியதும் இதனுடன் அரைத்த மசாலா மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து தீயை மிதமாக ஏறிய விட்டு தண்ணீர் வற்றும் வரை வேக வைத்து கடாயை இறக்கி விடுங்கள். அவ்வளவு தான் சுவையான கேரளா சிக்கன் வறுவல் தயார்.