ருசியான நூடுல்ஸ் இப்படி செய்து பாருங்க! எவ்வளவு செய்தாலும் காலியாகி விடும்!

Summary: குழந்தைகளுக்கு  எளிதான மற்றும் சுவையான சமையல் செய்ய விரும்பினால், நீங்கள் நியூட்ரிஷியஸ் நூடுல்ஸ் செய்யலாம்.குழந்தையாக இருந்தாலும் சரி பெரியவராக இருந்தாலும் சரி சீன உணவு யாருக்குத்தான் பிடிக்காது?  நூடுல்ஸ் மீதான மோகம் ஒவ்வொரு பிரிவிலும் காணப்படுகிறது. நியூட்ரிஷியஸ் நூடுல்ஸை வீட்டிலேயே மிக எளிதாக செய்து உங்கள் குழந்தைகளுக்கு தரலாம். இது உணவகத்தின் நூடுல்ஸைப் போல சுவையாக இருக்கும். மற்றும் ஆரோக்கியம் இதில் அதிகமாக இருக்கும். வாங்க இதை எப்படி செய்வது என்று பார்ப்போம்.

Ingredients:

  • 1 பாக்கெட் நூடுல்ஸ்
  • 1 வெங்காயம்
  • 1 கேரட்
  • 6 பீன்ஸ்
  • 1 கைப்பிடி வேக வைத்த பச்சைப் பட்டாணி
  • 1 டீஸ்பூன் சோயா சாஸ்
  • 2 டீஸ்பூன் டொமெட்டோ சாஸ்
  • 2 பல் பூண்டு
  • 1 காய்ந்த மிளகாய்
  • எண்ணெய்
  • உப்பு

Equipemnts:

  • 1 கடாய்

Steps:

  1. வெங்காயம்,கேரட், பீன்ஸை மிகவும் பொடியாக நறுக்கி கொள்ளவும். காய்ந்த மிளகாயை ஒன்றிரண்டாக பொடித்து கொள்ளவும்.
  2. கொதிக்கும் நீரில் நூடுல்ஸைப் போட்டு வேக வைத்து நீரை நன்கு வடித்து விடவும். வாணலியில் எண்ணெய் விட்டு வெங்காயம், கேரட், பீன்ஸ், பச்சைப் பட்டாணி சேர்த்து நன்கு வதக்கவும்.
  3. அத்துடன் சோயா சாஸ், டொமெட்டோ சாஸ், பூண்டு, காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து மேலும் வதக்கி… கடைசியாக நூடுல்ஸை சேர்த்து நன்கு கிளறி, சுடச்சுட பரிமாறவும்.