கிராமத்து சுவையான கத்தரிக்காய் ரசம் செய்வது எப்படி ?

Summary: கடினமான உணவு பொருட்களை உட்கொள்ளும் போதும் நாம் ரசம் சேர்த்து சாப்பிடுவதால் செரிமான பணிகள் வேகமாக நடக்கும். இந்த ரசத்தை வழக்கம் போல் செய்யாமல் புதியதாக ஒரு ரசம் ஒன்று செய்து பார்க்கலாம். ஆகையால் கத்தரிக்காய் ரசத்தை ஒரு முறை உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு செய்து கொடுத்தால் அவர்கள் உணவோடு மட்டும் சாப்பிடாமல் தனியாக சூப் போல குடிக்கவும் செய்வார்கள் அந்த அளவுக்கு மிகவும் ருசியான முறையில் அட்டகாசமாக இருக்கும். ஆகையாலன இந்த கத்தரிக்காய் ரசம் எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறிப்பு குறித்த தொகுப்பில் காணலாம்.

Ingredients:

  • 10 கத்தரிக்காய்
  • 1 பெரிய வெங்காயம்
  • 2 பச்சை மிளகாய்
  • உப்பு
  • ¼ tbsp மஞ்சள் தூள்
  • 1 tbsp வெல்லம்
  • 2 கப் புளி கரைத்த தண்ணீர்
  • 2 tbsp எண்ணெய்
  • 1 tbsp கடுகு
  • 1 tbsp சீரகம்
  • 2 வர மிளகாய்
  • ½ tbsp பெருங்காய தூள்
  • 1 கொத்து கருவேப்பிலை

Equipemnts:

  • 1 பெரிய பவுள்
  • 1 கடாய்
  • 1 பவுள்

Steps:

  1. முதலில் கத்திரிக்காய் ரசம் செய்வதற்கு நாம் வைத்திருக்கும் சிறிய அளவிலான கத்திரிக்காய்களை எடுத்துக்கொண்டு, அதன் பின்பு ஒரு சிறிய பாத்திரத்தில் மூன்று டீஸ்பூன் அளவு எண்ணெய் ஊற்றிக் கொள்ளுங்கள்.
  2. பின்பு அடுப்பை பற்ற வைத்த தீயை எரிய வைத்துக் கொள்ளுங்கள், பின்பு நாம் வைத்திருக்கும் கத்திரிக்காய் மீது எண்ணெயை தடவி கத்திரிக்காய் அடுப்பில் எறியும் தீயை சுட்டு எடுத்துக் கொள்ளுங்கள்.
  3. இப்படியாக மீதம் இருக்கும் கத்திரிக்காயின் தோல் கருகருவென என வரும் வரை சுட்டு எடுத்துக் கொள்ளுங்கள். அதன் பின்பு சுட்ட கத்திரிக்காய் மேற்புறத்தோலை எடுத்துவிட்டு ஒரு பெரிய பவுலில் போட்டு நன்றாக மசித்து விடுங்கள்.
  4. அதன் பின்பு மசித்த கத்தரிக்காயுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், உப்பு, மஞ்சள் தூள், வெள்ளம் மற்றும் நறுக்கிய கொத்தமல்லி இலைகள் சிறிது சேர்த்து நன்கு கைகளால் மசித்து விட்டுக் கொள்ளுங்கள்.
  5. அதன் பின்பு எலுமிச்சை அளவு புளியை இரண்டு கப் தண்ணீரில் ஊற வைத்து புளி கரைசல் தயார் செய்து கொள்ளவும். பின் தயார் செய்த புளி கரைசலையும் இதனோடு சேர்த்து நன்றாக கலந்து விடவும்.
  6. அதன் பின்பு ஒரு கடாயை அடுப்பில் வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் நன்கு சூடேறியதும் அதில் கடுகு, சீரகம், வரமிளகாய், பெருங்காயத்தூள் மற்றும் ஒரு கொத்து கருவேப்பிலை சேர்த்து தாளித்துக் கொள்ளுங்கள். பின் இந்த தாளிப்பையும் ரசத்துடன் சேர்த்து கொள்ளுங்கள் அவ்வளவுதான் சுவையான கத்திரிக்காய் ரசம் இனிய தயாராகிவிட்டது.