ருசியான மட்டன் நல்லி ரோஸ்ட் இப்படி செய்து பாருங்க மிச்சம் வைக்காம சாப்பிடுவாங்க!

Summary: பொதுவாக நம் வீடுகளில் வார கடைசியில் மட்டன் வாங்கி சுவையான ரெசிபிகளை செய்து குடும்பத்துடன் சாப்பிட்டு மகிழ்வோம். ஆனால் நாம் ஆட்டின் கறியை மட்டும் தொடர்ந்து நாம் நமக்கு சலிப்புதான் ஏற்படும் ஆனால் ஆட்டின் கறியை தவிர ஆட்டில் உள்ள உடல் உறுப்புகளும் சுவையாகவும் இருக்கும் நம் உடலுக்கு ஆரோக்கியத்தையும் தரும் வகையில் இருக்கும். இதில் நாம் சேர்க்கும் மசாலா கலவை ஒருவரை சாப்பிட தூண்டும் வகையில், நல்ல நிறத்தையும், நறுமணத்தையும் உண்டாக்கும்.

Ingredients:

  • 1/2  KG மட்டன் நல்லி எலும்பு
  • 3 பெரிய வெங்காயம்
  • 2 தக்காளி
  • 2 Tbsp இஞ்சி பூண்டு விழுது
  • 1/2 Tbsp மஞ்சள் தூள்
  • 3 Tbsp மிளகாய் தூள்
  • 1 Tbsp சோம்பு தூள்
  • 1/2 Tbsp கரம் மசாலா
  • 1 Tbsp மிளகு தூள்
  • 1/2 கப் தேஙகாய் பால்
  • 2 Tbsp தேங்காய் எண்ணெய்
  • 1 Tbsp மிளகு
  • 1 கொத்து கருவேப்பிலை
  • 2 வர மிளகாய்

Equipemnts:

  • 1 குக்கர்
  • 1 கடாய்
  • 1 பவுள்

Steps:

  1. முதலில் நாம் வைத்திருக்கும் நல்லி எலும்பைச் சுத்தம் செய்து குக்கரில் போட்டு அதனுடன் உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி 6 விசில் வரும் வரை நன்றாக வேகவிடவும்.
  2. பின் கடாயை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும், நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது மற்றும் நறுக்கிய தக்காளி சேர்த்து குழைய வதக்கவும்.
  3. பின் இதனுடன் மிளகாய்தூள், மஞ்சள் தூள், சோம்புத்தூள், கரம்மசாலா தூள் – மிளகுத்தூள் சேர்த்து வதக்கவும். பிறகு மசாலா நன்கு வதங்கியதும் வேகவைத்த நல்லி எலும்பை அதிலுள்ள தண்ணீருடன் சேர்க்கவும்.
  4. பின் தண்ணீர் வற்றும் வரை அடிபிடிக்காமல் கிளறிவிடவும். முக்கால் வாசித் தண்ணீர் வற்றியதும் கெட்டித் தேங்காய்ப்பால் சேர்த்து மூடி போடாமல் குறைவான தீயில் வைத்துக் கிளறவும்.
  5. தேங்காய்ப் பால் நன்கு வற்றி வறுவல் பதத்திற்கு வந்ததும் அடுப்பிலிருந்து இறக்கி, ஒரு தனி கடாயில் கடுகு, மிளகு, மிளகாய் வற்றல், கறிவேப்பிலை தாளித்துச் சேர்க்கவும் அவ்வளவு தான் சுவையான நல்லி ரோஸ்ட் தயார்.