வெறும் 10 நிமிடத்தில் ஸ்நாக்ஸ் ரெடி! ருசியான சேனைக்கிழங்கு மிக்சர் இப்படி செய்து பாருங்க!

Summary: கடையில் காசு கொடுத்து தான் கிலோ கணக்கில் மிக்சர் வாங்குவோம். அப்படி இல்லையா, நம் வீட்டிலேயே செய்ய வேண்டும் என்றால் கடலை மாவு பிசைந்து அதை  சுட்டு எடுத்து அதன் பின்பு மற்ற பொருட்களை எல்லாம் வறுத்து ஒன்றாக கலந்து மிச்சர் செய்வதற்குள் போதும் போதும் என ஆகும். ஆனால் இந்த சேனைக்கிழங்கு மிக்சர் அந்த சிரமம் எல்லாம் தேவையில்லை சேனைக்கிழங்கு இருக்கா. நச்சுன்னு மொறு மொறுன்னு சூப்பரா இந்த சேனைக்கிழங்கு மிக்சரை செய்து அசத்துங்க. இந்த சேனைக்கிழங்கு மிக்சர் ஆரோக்கியமானதும் சுவையானதும் கூட . வாங்க இதை எப்படி செய்வது என்று பார்ப்போம்.

Ingredients:

  • 1/4 கிலோ சேனைக்கிழங்கு
  • 3 டீஸ்பூன் பொட்டுக்கடலை
  • 1 பிடி வறுத்தவேர்க்கடலை
  • 1/4 டீஸ்பூன் மிளகாய்தூள்
  • 1 சிட்டிகை மஞ்சள்தூள்
  • 1/2 டீஸ்பூன் உப்பு
  • எண்ணெய்
  • 1 கைப்பிடி கறிவேப்பிலை

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 பெரிய பவுள்

Steps:

  1. சேனைக்கிழங்கை நன்கு மண் போகக் கழுவி, கடலைப் பருப்பு அளவுக்கு சிறு சிறுசதுரங்களாக வெட்டிக் கொள்ளுங்கள். மஞ்சள் தூள், உப்பு போட்டு தண்ணீர் சேர்த்து அடுப்பில் வையுங்கள்.
  2. ஒரு கொதி வந்ததும், இறக்கி தண்ணீரை வடித்து விடுங்கள், எண்ணெயைக் காயவைத்து, கிழங்கைப் போட்டு மொறுமொறு வெனப் பொரித்தெடுங்கள்.
  3. கறிவேப்பிலையையும் போட்டுப்பொரித்து அள்ளுங்கள். ஒரு பாத்திரத்தில், பொரித்த கிழங்கு, பொட்டுக்கடலை, வறுத்த வேர்க்கடலை, மிளகாய்தூள் போட்டு நன்கு கலந்து வையுங்கள். கொரிப்பதற்குக் கிடைத்து விட்டது காரமான கரகர மிக்சர்.