ருசியான பாசிப்பருப்பு சொதி குழம்பு இப்படி செய்து பாருங்க! ஒரு தட்டு சோறும் காலியாகும்!

Summary: பாசிப்பருப்பு சொதி குழம்பு இட்லி, தோசை, ஆப்பம், சூடான சாதம் என்று எல்லாவற்றுக்குமே சூப்பரான காம்பினேஷன் ஆகஇருக்கக் கூடிய இந்த சொதி குழம்பு முற்றிலும் தேங்காய்ப்பால்  கொண்டு செய்யப்படுகிறது. தேங்காய் பால் மற்றும் காய்கறி சேர்த்து செய்யும் இந்த ஆரோக்கியமான சொதி குழம்பு சுவையாக நம் வீட்டிலும் தயாரிக்கலாம்.பாரம்பரியம் மிக்க இந்த சொதி குழம்பை பக்குவமான முறையில் சுலபமாக எப்படி செய்வது என்பதைபற்றி தெரிந்து கொள்வதற்காகவே இந்த பதிவு.

Ingredients:

  • 1/4 கப் பாசிப்பருப்பு
  • 1 1/2ப் கப் முதல் தேங்காய்ப் பால்
  • 1 1/2 கப் இரண்டாம் தேங்காய்ப் பால்
  • 2 பெரிய வெங்காயம்
  • 2 தக்காளி
  • 1 துண்டு இஞ்சி
  • 1/4 டீஸ்பூன் மஞ்சள்தூள்
  • 2 எலுமிச்சம்பழச் சாறு
  • கறிவேப்பிலை
  • உப்பு
  • 6 பல் பூண்டு
  • 4 பச்சை மிளகாய்
  • 1 துண்டு பட்டை
  • கறிவேப்பிலை
  • 2 டீஸ்பூன் எண்ணெய்

Equipemnts:

  • 1 கடாய்

Steps:

  1. பாசிப்பருப்பை மஞ்சள்தூள் சேர்த்து மலர வேகவையுங்கள். வெங்காயம், தக்காளியைப்பொடியாக நறுக்குங்கள்.
  2. வெந்த பாசிப்பருப்புடன் இரண்டாவது தேங்காய்ப் பாலை சேர்த்து வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் விழுது, நறுக்கிய இஞ்சி, பூண்டு, உப்பு சேர்த்து, விடாமல் கிளறி வேகவையுங்கள்.
  3. வெங்காயம் நன்கு வெந்தததும் முதல் தேங்காய்ப் பால் சேர்த்து தாளித்துகொட்டி இறக்கி, எலுமிச்சம்பழச் சாறு, கறிவேப்பிலை சேருங்கள்.இட்லி, இடியாப்பம், சாதம் என எதற்கு வேண்டுமானாலும்தொட்டுக் கொள்ளலாம்.