மணமணக்கும் ஆந்திரா ஸ்டைல் சாம்பார் செய்வது எப்படி ?

Summary: சாம்பாரை பல்வேறு வகைகளில் வைப்பபோம் ஒவ்வொரு ஊர்களில் வித்தியாசமாக மணமும் சுவையில் சாம்பார் நன்றாகவே இருக்கும். அந்த வகையில் நாம் இன்று பார்க்க இருப்பது வெளி மாநிலத்து சாம்பார் ஆம், இன்று நாம் ஆந்திரா ஸ்டைல் சாம்பார் பற்றி தான் பார்க்க இருக்கிறோம். ஆந்திரா ஸ்டைல் சாம்பார் உண்மையில் மிகவும் சுவையாக அற்புதமான முறையில் இருக்கும். ஆகையால் இன்று இந்த ஆந்திரா ஸ்டைலில் சாம்பார் எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்து தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

Ingredients:

  • ½ கப் துவரம் பருப்பு
  • 2 தக்காளி
  • 6 பல் பூண்டு
  • ½ tbsp மஞ்சள் தூள்
  • 1 tbsp உப்பு
  • 1 tbsp எண்ணெய்
  • 1 tbsp கடலை பருப்பு
  • ½ tbsp கடுகு
  • ¼ tbsp வெந்தயம்
  • ½ tbsp சீரகம்
  • 3 காய்ந்த மிளகாய்
  • 1 கொத்து கருவேப்பிலை
  • 15 சின்ன வெங்காயம்
  • 1 பெரிய வெங்காயம்
  • 3 பச்சை மிளகாய்
  • 1 கேரட்
  • 1 சக்கரை வள்ளி கிழங்கு
  • 1 முள்ளங்கி
  • 2 முருங்ககாய்
  • உப்பு
  • 2 tbsp மிளகாய் தூள்
  • 1 tbsp தனியா தூள்
  • ½ கப் புளி கரைசல்
  • 3 கப் தண்ணீர்
  • வேக வைத்த பருப்பு
  • கொத்த மல்லி

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 குக்கர்
  • 1 பவுள்

Steps:

  1. முதலில் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து அதில் அரை மணி நேரம் ஊற வைத்த துவரம்பருப்பை பருப்பை ஊற வைத்த தண்ணீர் உடன் சேர்த்து அதனுடன் நறுக்கிய தக்காளி, பூண்டு பல், மஞ்சள் தூள் மற்றும் உப்பு போன்ற பொருட்களை சேர்த்த ஐந்து விசில் வரும் வரை நன்கு வேக வைத்துக் கொள்ளுங்கள்.
  2. அதன் பின்பு கடாயை அடுப்பில் வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றிக் கொண்டு எண்ணெய் நன்கு காய்ந்ததும் அதில் கடலை பருப்பு, கடுகு, வெந்தயம், சீரகம், காய்ந்த மிளகாய், கருவேப்பிலை மற்றும் தோல் உரித்த சின்ன வெங்காயங்கள் சேர்த்து நன்றாக கிளறி விட்டு வதக்கிக் கொள்ளுங்கள்.
  3. பின்பு சின்ன வெங்காயம் பாதி அளவு வெந்து வந்ததும் இதனுடன் நாம் பொடியாக நறுக்கி வைத்திருக்கும் ஒரு பெரிய வெங்காயத்தையும் மற்றும் இதனுடன் இரண்டு பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும. வெங்காயம் நன்றாக வதங்கி வந்ததும்.
  4. இதனுடன் நறுக்கிய ஒரு கேரட், சர்க்கரைவள்ளி, கிழங்கு, முள்ளங்கி மற்றும் நறுக்கிய இரண்டு முருங்கக்காய் சேர்த்து நன்கு கிளறி விட்டுக் கொள்ளவும். அதன் பின்பு இந்த காய்கறிகளுடன் ஒரு டீஸ்பூன் உப்பு, தனியா தூள், அரை கப் புளி கரைசல் மற்றும் இரண்டு கப் தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க வைத்துக் கொள்ளுங்கள்.
  5. பின்பு சாம்பார் நன்றாக கொதித்து வந்ததும் நாம் குக்கரில் வேகவைத்த பருப்பு, தக்காளி மற்றும் பூண்டு பற்களை நன்றாக மசித்து விட்டு இதனுடன் சேர்த்து மற்றொரு கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்துக் கொள்ளுங்கள்.
  6. அதன் பின் சாம்பர் நன்றாக கொதித்து மணமகள் தொடங்கியது இதனுடன் சிறிது நறுக்கி கொத்தமல்லி இலைகளை சேர்த்து சாம்பார் இறக்கி வைத்து விடுங்கள் அவ்வளவு தான் ஆந்திரா ஸ்டைல் சாம்பார் இனிதே தயாராகி விட்டது.