ரவா அப்பம் இப்படி செய்து பாருங்க! மாலை நேரத்திற்கு ஏற்ற ஸ்நாக்ஸ்!

Summary: வணக்கம் நண்பர்களே. நாம் பெரும்பாலும் வாங்கி பயன்படுத்தாத ஒரு காய் தான் இந்த கோவக்காய். கோவக்காய் பழம் சாப்பிடுவதற்கு சுவையாக இருக்கும். கோவக்காய் பொரியல் செய்து சாப்பிட்டால் இன்னும் சுவையாக இருக்கும். அதுவும் ஆந்திரா ஸ்டைல் கோவக்காய் பொரியல் சொல்லவே வேண்டாம். ஒரு தரம் இந்த முறையில் கோவக்காய் பொரியல் செய்து பாருங்கள். ரசம் மற்றும் சாம்பாருக்கு, இந்த கோவக்காய் பொரியல் வைத்து சாப்பிட்டால்ருசியாக இருக்கும். கோவக்காய் பொரியல் எப்படி செய்வது என்று இந்த பதிவில் பார்ப்போம்.

Ingredients:

  • 1/2 கப் ரவை
  • 1/4 கப் கோதுமை மாவு
  • 1/4 கப் மைதா
  • 1/4 கப் சர்க்கரை
  • 2 tsp சர்க்கரை
  • 2 tsp தேங்காய்
  • 1 சிட்டிகை சோடா உப்பு
  • 1/4 tsp ஏலக்காய் பொடி
  • தண்ணீர்
  • எண்ணெய்
  • 1 உப்பு

Equipemnts:

  • 1 பெரிய பவுல்
  • 1 வாணலி

Steps:

  1. முதலில் ஒரு பௌலில் ரவையைப் போட்டு, தண்ணீர் சிறிது ஊற்றி, 1 மணிநேரம் ஊற வைக்க வேண்டும். ஒரு மணிநேரம் ஆன பின்னர் அதில் கோதுமை மாவு, மைதா மற்றும் சர்க்கரை சேர்த்து, தண்ணீர் சிறிது ஊற்றி ஓரளவு கெட்டியான மாவு போல், கட்டிகள் இல்லாதவாறு நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
  2. பின்பு அதில் தேங்காய், ஏலக்காய் பொடி, பேக்கிங் சோடா, உப்புசேர்த்து நன்கு கிளறி விட வேண்டும். பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.
  3. எண்ணெய் சூடானதும், ஒரு சிறிய குழிக் கரண்டியில் மாவை எடுத்து, எண்ணெயில் ஊற்றி பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும். இப்படி அனைத்து மாவையும் பொரித்து எடுத்தால், ரவா அப்பம் ரெடி.