காரைக்குடி பெப்பர் சிக்கன் இப்படி செய்து பாருங்க! சுட சுட சோறுடன் சாப்பிட பக்காவான ரெசிபி!

Summary: அசைவ பிரியர்களுக்கு சிக்கன் என்றாலே மிகவும் பிடிக்கும் அதுவும் பெப்பர் சிக்கன் என்றால் அவ்வளவு தான் மிகவும் விரும்பி சாப்பிடுவாங்க. ஹோட்டல் சுவையில் எப்படி பெப்பர் சிக்கன் செய்வதென்று தான் இன்று பார்க்க போகிறோம். இந்த பேப்பர் சிக்கன் செய்து சுட சுட சாதத்துடன் ரசம் ஊற்றி இந்த சிக்கனை சேர்த்து சாப்பிட்டால் சொல்வதற்கு வார்த்தையே இல்லை அவ்வளவு அற்புதமாக இருக்கும்.

Ingredients:

  • ½ கிலோ சிக்கன்
  • 1 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
  • 1 ஸ்பூன் சீரகம்
  • கருவேப்பிலை
  • 1 ஸ்பூன் கறிமசாலா தூள்
  • 1 ஸ்பூன் மிளகாய் தூள்
  • பெப்பர்
  • உப்பு

Equipemnts:

  • கடாய்

Steps:

  1. முதலில் சிக்கனை நன்கு கழுவி சுத்தம் செய்து வைத்துக்கொள்ளவும்.
  2. பிறகு ஒரு வாணலில் சிக்கனை போட்டு, அத்துடன் இஞ்சி பூண்டு விழுது, தேவையான அளவு உப்பு சேர்த்து ஒரு டம்பளர் தண்ணீர் ஊற்றி மூடி போட்டு நன்கு10 நிமிடம் வேக வைக்கவும்.
  3. அடுத்து ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சீரகம், கருவேப்பிலை, சேர்த்து பொரிந்ததும் வேக வைத்த சிக்கனை போட்டு அத்துடன் கறிமசாலா தூள், மிளகாய் தூள், சேர்த்து நன்கு கிளறி கடைசியாக பெப்பர் பொடியை தூவி ஒரு கிளறு கிளறி இறக்கவும்.
  4. இப்பொழுது சுவையான பெப்பர் சிக்கன் தயார்.