சுட சுட சோறுடன் சேர்த்து சாப்பிட ருசியான இஞ்சி துவையல் இப்படி செய்து பாருங்க!

Summary: இஞ்சிசாப்பிடுவது செரிமானத்தை ஊக்குவிக்கிறது. இஞ்சி துவையல் சாப்பிடுவதற்கு சுவையானதும் , ஆரோக்கியமானதும் கூட. பலகாரம்,இனிப்பு வகைகள், சுவையான அசைவ சாப்பாடு… ம்ம்.. இன்னும் எவ்வளவோ இருக்கு. இன்னிக்கே டின் கட்டிடனும்னு தோணுது… ஆனா ஜீரணக் கோளாறு ஆகிடுமேனு தீபாவளியதுமா வாய்க்கு பூட்டு போட முடியாம தவிச்சிட்டிருக்கவங்களோட தவிப்ப தணிக்கத்தான் இந்த இஞ்சி துவையல்! அப்பறம் என்ன கவலை.. ஒரு பிடி பிடிச்சிடவேண்டியதுதானே……வாங்க இதை எப்படி செய்வது என்று பார்ப்போம்.

Ingredients:

  • 1 இஞ்சி விரல் நீள துண்டு
  • 10 சிறிய வெங்காயம்
  • 5 காய்ந்த மிளகாய்
  • 1 டீஸ்பூன் சீரகம்
  • 1 டீஸ்பூன் தனியா
  • 4 டீஸ்பூன் மிளகு
  • 1/2 கப் தேங்காய் துருவல்
  • புளி
  • கறிவேப்பிலை
  • உப்பு
  • 3 டேபிள்ஸ்பூன் எண்ணெய்

Equipemnts:

  • 1 மிக்ஸி
  • 1 பவுள்

Steps:

  1. இஞ்சியை தோல் நீக்கி சுத்தம் செய்து பொடியாக நறுக்கவும். வெங்காயத்தை தோல் உரித்து வைக்கவும். வாணலியை அடுப்பில் வைத்து 1 ஸ்பூன் எண்ணெய் விட்டு இஞ்சியை வதக்கி தனியாக வைக்கவும்.
  2. அதே வாணலியில் மீதி எண்ணெய் விட்டு வெங்காயத்தை போட்டு வதக்கவும். தனியா, மிளகாய், சீரகம், மிளகு, கறிவேப்பிலை போட்டு வதக்கி தேங்காய் துருவல், புளி, உப்பு, வதக்கிய இஞ்சி சேர்த்து வதக்கி ஆறவிடவும்.
  3. ஆறியவுடன் மிக்சியில் சிறிது தண்ணீர் சேர்த்து அரைக்கவும். சுவையான இஞ்சி துவையல் ரெடி.